குடவிளக்காக இருக்கும் மலையக மக்களை

அகல் விளக்காக சுடர் விட்டு ரி விடுவதே

 எமது நோக்கம்

அமைச்சர் மனோ கணேசன்

குடவிளக்காக குடத்திற்குள் ஏற்றிய விளக்காக ரிந்துக் கொண்டிருக்கும் மலையக மக்களை அகல் விளக்காக சுடர் விட்டு ரி வைக்கும் பாரிய முயற்சியில் நாங்கள் ஈடுபட்டு கொண்டு இருக்கின்றோம். கடந்த காலங்களில் அப்படி இருக்கவில்லை முற்று முழுதாக தள்ளி வைக்கபட்டவர்களாவே இருந்தோம். தற்போது மலைய தமிழர்கள் என்று அடையாளபடுத்தபட்டு கொண்டு இருக்கின்றோம் இவ்வாறு அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
25 வருடங்களை கடந்த வரலாற்றையும்¸ போராட்டங்களையும்¸ சவால்களையும் கடந்து பொது மக்களுக்கு பொது நலம் கலந்த சேவைகளையும் அதன் ஊடாக பல சாதணைகளைப் படைத்து வரும்  கண்டி மனித அபிவிருத்தி தாபனத்தின் வெள்ளி விழா கண்டி பேராதெனிய ரோயல் கார்டன் ஹோட்டலில் இதன் தலைவர் பி.பி. சிவப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு அதிதியாக அமைச்சர் மனோ கணேசன் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நானயகார¸ வேலு குமார்¸ எம்.திலகராஜ்¸ கண்டி உதவி இந்திய ஸ்தானிகர் செல்வி இராதா வெங்கட்ராமன்¸ மத்திய மாகாண சபை முதல்வர் துரை மதியுகராஜா¸ மத்திய மாகாண சபை உறுப்பினர் சரஸ்வதி சிவகுரு¸ “இமடார்நிறுவனத்தின் சர்வதேச பனிப்பாளர் நிமல்கா பெர்ணாண்டோ¸ திருமதி. சில்வியா புகாரி சர்வதேச பணிப்பாளர்– CCFD  (பிரான்;ஸ்இலங்கை நாட்டுக்கான பணிப்பாளர்{லியட் - – CCFD  - பிரான்;ஸ்¸MDM நிறுவனத்தின் (பிரான்ஸ்) இலங்கை நாட்டுக்கான பணிப்பாளர்எலீனா ஆகியோருடன் மலேசியா¸ இந்தியா போன்ற நாடுகளின் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள்¸ தேசிய சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள்¸ பல்கலைக்கழக கல்விமான்கள்¸ புத்திஜீவிகள் உள்ளிட்ட மனித அபிவிருத்தி தாபனத்தின் கேகாலை¸ கண்டி¸ நுவரெலியா மாவட்ட பெருந்தோட்டத்தொழிலாளர்கள்¸ அம்பாறை¸ மட்டக்களப்பு¸ முல்லைத்தீவு மாவட்ட பயனாளிகள் உள்ளிட்ட மனித அபிவிருத்தி தாபனத்தின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன் அவர்கள். தற்போது மலைய மக்களுக்கு ஒரு அங்கிகாரம் கிடைத்துள்ளதால். லக மக்கள் எங்களை திரும்பி பார்க்கும் நிலை தோன்றி உள்ளதுஅதற்கான வேலைத்திட்டங்களை த்திரமாக செய்கின்றோம். நேர்மையுடனும் துனிச்சலுடனும் அர்பனிப்புடனும் தூர பார்வையுடனும் செயற்பட்டு கொண்டு இருக்கின்றோம். என்று கூறினார்.

-    பாதிருஞானம்



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top