முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு, யுத்த முடிவின் பின்னர் மீண்டும் முல்லைத்தீவில் மீள்குடியேறி நீண்ட காலமாக வீடற்று வாழ்கின்றவர்களுக்கு, ஜனாதிபதி விஷேட மீள்குடியேற்ற செயலணி ஊடாக வீடமைப்புக்கான நிதியுதவிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று (30) கலந்து கொண்டனர்.
முல்லைத்தீவு, முள்ளியவளை, நீராவிப்பிட்டியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வட மாகாண சபை உறுப்பினர் யாசீன் ஜவாஹிர், மீள்குடியேற்ற செயலணியின் பணிப்பாளர் யாசீன், மீள்குடியேற்ற செயலணியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் ரிபாய் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments:
Post a Comment