இந்தியாவின் புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான

தேர்தல் இன்று இடம்பெறுகின்றது



இந்தியாவின் புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. பா.ஜனதா வேட்பாளராக ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் சார்பில் மீராகுமார் போட்டியிடுகின்றனர்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இதன், அரசியல் சாசனத்தை கட்டிக் காக்கும் பெருமைக் குரிய இடத்தில் உள்ள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம், அடுத்த வாரம் முடிகிறது.

இறுதியில் இந்த தேர்தலில் சற்றும் எதிர்பாராத வகையில், பீகார் மாநில கவர்னராக இருந்து வந்த ராம்நாத் கோவிந்த் (வயது 71) பாரதீய ஜனதா கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் உத்தரபிரதேச மாநி லத்தைச் சேர்ந்த தலித் இனத்தலைவர் ஆவார்.

இவரை எதிர்த்து காங்கிரஸ் தலைமையிலான 17 எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் மீராகுமார் (72) நிறுத்தப்பட்டுள்ளார். இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தலித் இனத்தலைவர் ஆவார்.

இந்த தேர்தலில் 776 தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள், 4,120 எம்.எல்..க்கள் என மொத்தம் 4,896 பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். (எம்.பி.க் களில் 543 பேர் மக்களவை உறுப்பினர்கள், 233 பேர் டெல்லி மேல்-சபை உறுப்பினர்கள்).



ஒரு எம்.பி.யின் ஓட்டு மதிப்பு 708 ஆகும். ஆனால் எம்.எல்..க்கள் ஓட்டின் மதிப்பு, அந்தந்த மாநில மக்கள் தொகைக்கு ஏற்ப மாறுபடும்.

இந்த நிலையில் இன்று  ஜனாதிபதி தேர்தலில் வாக்குப்பதிவு நடக்கிறது. டெல்லியில் பாராளுமன்ற வளாகத்திலும், தமிழ்நாட்டில் சென்னையில் அமைந்துள்ள சட்டசபை வளாகத்திலும், இதே போன்று பிற மாநிலங்களில் உள்ள சட்டசபை வளாகங்களிலும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மொத்தம் 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழக சட்டசபை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தமிழக எம்.எல்..க்கள் வாக்களிக்கிறார்கள்.
ஜனாதிபதி தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் வாக்குரிமை பெற்றுள்ள அனைத்துக் கட்சி தலைவர்களும் பாராளுமன்றத்துக்கு இன்று வருவதாலும், மழைக் கால கூட்டத்தொடர் தொடங்குவதாலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகளும், வாக்குச்சீட்டுகளும், பிற சாதனங்களும் போய்ச்சேர்ந்து விட்டன.

இன்று காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிகிறது. வாக்குப்பதிவை தேர்தல் கமிஷனின் 33 பார்வையாளர்கள் மேற்பார்வையிடுகிறார்கள்.

எம்.பி.க்களுக்கான வாக்குச்சீட்டுகள் பச்சை நிறத்திலும், எம்.எல்..க்களின் வாக்குச்சீட்டுகள் இளஞ்சிவப்பு நிறத்திலும் இருக்கும்.

வாக்காளர்களான எம்.பி.க்
 களும், எம்.எல்..க்களும் வாக்குச்சீட்டில் இடம்பெற்றிருக்கிற 2 வேட்பாளர்களில் 1, 2 என்று தங்கள் முதல் தேர்வையும், இரண்டாவது தேர்வையும் வரிசைப்படுத்தி எழுதி வாக்குப்போட வேண்டும்.

இதற்கான பிரத்யேக பேனாவை வாக்காளர்களுக்கு தேர்தல் கமிஷன் வழங்குகிறது. வாக்குப்போட செல்வதற்கு முன் வாக்குச்சாவடியில் எம்.பி.க்கள். எம்.எல்..க்களின் சொந்த பேனாக்களை அங்கிருக்கிற அலுவலர் வாங்கிக்கொண்டு விடுவார். அவர்கள் தேர்தல் கமிஷன் வழங்குகிற தொடர் எண்களைக் கொண்ட பேனாவை பெற்றுச் சென்று, வாக்குப்போட்டு விட்டு வந்தபின்னர், அவர்களது பேனாக்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு விடும்.

தேர்தல் கமிஷன் வழங்குகிற பிரத்யேக பேனாவில் வைலட் நிற மை பயன்படுத்தப்படுகிறது. இந்த பேனாக்களை, மைசூர் பெயிண்ட்ஸ் அண்ட் வார்னி லிமிடெட்டில் இருந்து தேர்தல் கமிஷன் வாங்கி உள்ளது. இந்த நிறுவனம்தான் வாக்காளர்கள் கை விரலில் வைக்கிற அழியாத மையை தேர்தல் கமிஷனுக்கு வினியோகிக்கிறது.

கடந்த ஆண்டு அரியானா மாநிலத்தில் நடந்த டெல்லி மேல்-சபை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட பேனா மையினால் ஏற்பட்ட சர்ச்சையால்தான், இந்த தேர்தலில் முதல் முறையாக தேர்தல் கமிஷன் பிரத்யேக பேனாக்களை பயன் படுத்த முடிவு செய்துள்ளது.

வாக்குச்சாவடியில் வாக்காளர்களான எம்.பி.க்கள், எம்.எல்..க்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும், என்னவெல்லாம் செய்யக்கூடாது என கூறுகிற குறிப்புகளை கொண்ட சிறப்புபோஸ்டர்களையும் தேர்தல் கமிஷன் இந்த தேர்தலில் முதல் முறையாக அறிமுகம் செய்கிறது.

ஜனாதிபதி தேர்தலில் எந்த கட்சியும் இந்த வேட்பாளருக் குத்தான்முதல்வாக்குப் போட வேண்டும் என்று கொறடா உத்தரவு போட முடியாது.

பாராளுமன்ற வளாக வாக்குச்சாவடியில் வைக்கப்படுகிற வாக்குப்பெட்டிகள், வாக்குப்பதிவு முடிந்தவுடன்சீல்வைக்கப்பட்டு அங்குள்ள அறையில் துப்பாக்கி ஏந்திய பொலிஸார் பாதுகாப்பில் வைக்கப்படும்.

இதே போன்று மாநில சட்டசபைகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படுகிற வாக்குப்பெட்டிகளும் வாக்குப்பதிவு முடிந்துசீல்வைத்து டெல்லிக்கு அனுப்பிவைக்கப்படும்.

எதிர்வரும் 20 ஆம் திகதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. அதே நாளில் முடிவு அறிவிக்கப்பட்டு விடும்.

இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு பாரதீய ஜனதா, அதன் கூட்டணி கட்சிகள், கூட்டணியில் இடம் பெறாத ஐக்கிய ஜனதாதளம், .தி. மு.. உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவால் 60 சதவீதத்துக்கும் மேலான ஆதரவு உள்ளதால், அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.


புதிய ஜனாதிபதி எதிர்வரும் 25 ஆம் திகதி பதவி ஏற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top