நீதி அமைச்சினால் 400 சமாதான நீதவான் பதவிகள்
நியமனக் கடிதங்களை மேலதிகச் செயலாளா்
நீதியமைச்சினால் 400 சமாதான நீதவான் பதவிக்கான நியமனக் கடிதங்கள் நீதி மற்றும் பௌத்த விவகார அமைச்சா் விஜயதாச ராஜபக்சவினால் இன்று 18 ஆம் திகதி பௌத்த விவகார அமைச்சில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் பாராளுமன்ற விவகார மற்றும் காணி அமைச்சா் கயந்த கருநாதிலக்கவும் நீதி அமைச்சின் மேலதிகச் செயலாளா் (நிர்வாகம்) ஏ.மன்சூரும் கலந்து கொண்டு நியமனக் கடிதங்களை வழங்கினார்கள்..
இச் சமாதான நீதவான் பதவிகளில் 105 பௌத்த குருமார்களுக்கும் 100 பௌத்த தகம் பாடாசலை ஆசிரிய, ஆசிரியைகளுக்கும் வழங்கப்பட்டதாகவும் இவற்றில் 15 தமிழா்களும் 10 முஸ்லிம்களும் மாத்திரமே அடங்குகின்றனா் எனவும் தெரிவிக்கப்படுகின்றது..
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.