கொள்கலனில் கொக்கேயின்

கூட்டுறவு விற்பனை நிலைய ஊழியர்களே

முதன்முதலில் பொலிஸாருக்கு அறிவித்தனர்

பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு



சீனி பொதிகளைக் கொண்ட கொள்கலனில் கொக்கேயின் போதைப் பொருள் காணப்பட்டமைக்கும், சதொஸ கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்திற்கும் எதுவித தொடர்பும் இல்லை என்று கைத்தொழில்   மற்றும் வத்தககத் துறை  அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
 பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண ன்று பாராளுமன்றத்தில் எழுப்பிய  கேள்வி ஒன்றிற்கு பதிலளித்து உரையாற்றும் பொழுதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேலும் தெரிவித்ததாவது:
அண்மையில் சீனி பொதிகளைக் கொண்ட தாங்கியில் கொக்கேயின் போதைப் பொருள் காணப்பட்டமைக்கும், சதொஸ கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்திற்கும் எதுவித தொடர்பும் இல்லை
 கூட்டுறவு விற்பனை நிலைய ஊழியர்களே இதுவிடயம் தொடர்பில் முதன்முதலில் பொலிஸாருக்கு அறிவித்தனர். இந்த சம்பவத்தை அடுத்து, விசாரணைகள் முடிவடையும் வரை இந்த விநியோகஸ்தர் ஊடாக பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.
தாம் அமைச்சு பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின்னர் மேலதிகமாக வேறு எந்த பொருளையும் இறக்குமதி செய்யவில்லை
இன்றுவரை கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கவென 132 பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்கள் உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். இந்த விநியோகஸ்தர்கள் மூலமாகவே அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களை தருவித்து சந்தைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேலும் தெரிவித்தார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top