ஒலுவிலில் இருந்து ...


அட்டாளைச்சேனை பளீல் பி.ஏ அவர்களுக்கு ஒரு கடிதம்



மதிப்புக்குரிய Muhmed Falil BA sir அவர்களே!
 நான் ஒலுவில் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயமே அதில் சந்தேகமே இல்லை.
நன்றி கெட்ட வார்தையை நீங்கள் சொல்லுவதை பார்த்தால் சிரிப்பு வருகிறது ஸேர். இதை கேட்க தைரியம் இருந்தால் உங்கள் தலைவரிடம் கேளுங்கள் அவர்தான் நன்றி கெட்டு நடந்து கொண்டிருக்கிறார். தேசிய பட்டியல் தொடக்கம் ஒலுவில் விடயம் இருந்து மாயக்கல்லி சிலை வரை.
இயற்கையோடு நான் போராட சொல்ல வில்லை. அப்படி சொல்லுவதற்கு நான் பைத்திய காரனும் இல்லை. அப்படி செல்லுவேன் என்று நீங்களும் நினைப்பதற்கு சின்ன பிள்ளை (baby) இல்லை. நீங்கள் படித்த BA என்பதை மறந்து விடாதீர்கள்.
பழில் ஸேர் உங்களுக்கு அந்த மக்களின் பிரச்சினை தெரியாது. அதுக்கு உங்களைச் சொல்லி குற்றமில்லை.
ஏனென்றால் சொந்த ஊர் .சேனை மக்களின் பிரச்சினை, தேவைகளைக் கூட கண்டுகொள்ளாதவர் நீங்கள்.
உங்களுக்கு அந்த நாலு பாறங்கற்கள் போட்டது மட்டும்தான் கண்ணுக்கு தெரியும். காரணம் விளம்பரப்படுத்தினானே அந்த கற்களை போட்டார்கள் என்பதனால்.
ஆனால் அந்த ஊர்மக்கள் பட்ட கஸ்டங்களும் வேதனைகளையும் நான் அறிவேன். அந்த வகையில்தான் சொல்லுகிறேன்.
இதன் சரித்திரத்தை உங்களுக்கு கூறப்போனால் பல நாட்கள் போதாது. இருந்தும் சுருக்கமாக சொல்லுகிறேன் கேளுங்கள்.
இந்த கடலரிப்பு வந்தது ஓரிரு நாட்கள் அல்ல ஓரிரு மாதமும் அல்ல. பல வருடங்களாச்சி என்பதே உண்மை.
ஆனால் அன்றிலிருந்து அந்த மக்கள் நீங்கள் தூக்கி தலையில் வைத்து ஆடும் ஹக்கீம் தலைவரிடம் பல தடவைகள் அவரின் காதில் ஊதியுள்ளார்கள். அவரும் அடிக்கடி வந்தால் சொல்லுவதுண்டு நான் உரிய இடத்தில் பேசி இதற்கான நிரந்தர தீர்வை பெற்றுத் தருகிறேன் என்று.
இதற்குரிய தீர்வை உடனடியாக எந்த கட்சியாலும், எந்த தலைவராலும் எடுத்து தர முடியாது இது சாதாரன விடயமல்ல என்பதற்காக ஹக்கீமின் பேச்சை வேதவாக்காக நம்பினார்கள் அவரின் முகவர்கள். அதைத் தொடர்ந்து பாமர மக்களும் நம்பிக் கொண்டே இருந்தார்கள் முடித்து தருவார் என்ற நம்பிக்கையில்.
ஆனால் பல ஆண்டுகளாகவும் அவரால் எந்த முயற்ச்சியும் எடுக்க வில்லை என்பது ன்றாகவே புரிந்தது. அங்குள்ள பொதுவான சிந்தனை வாதிகளுக்கு.
ஒவ்வொரு தடவையும் ஹக்கீம் வரும்போதெல்லாம் இந்த விடயமாக சொன்னால். அவர் சொல்லுவது விரைவில் இதற்கான தீர்வு கிடைக்கும் கிடைக்கும் என்றுதான்.
கடைசியாக கூட உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். பாலமுனையில் நடந்த மாநாட்டிற்கு முதல் நாள் என்று நினைக்கிறேன்.
ஹக்கீம் ஒலுவிலுக்கு வந்து அங்குள்ளவர்களிடம் சொன்ன விடயம் என்ன தெரியுமா?
நாளை மாநாட்டுக்கு பிரதமர், ஜனாதிபதி வருகிறார் அவர்களிடம் நான் முன் வைக்கும் கோரிக்கை ஒலுவில் மக்களின் காணி பிரச்சினைக்கான தீர்வு, கடலரிப்புக்கான தீர்வு இவ்விரண்டையும் செய்து தருமாறுதான் நான் கேட்பேன் என்று சொல்லி ஆதரவாளர்களை உசுப்பேத்தி விட்டுச் சென்றது உங்களுக்கு தெரியாது. அந்த மக்களுக்கு தெரியும்.ஏன் என்றால் பாதிக்கப்பட்டது நீங்களல்ல அந்த மக்கள் என்பதே உண்மை.
குறிப்பு:- மாநாட்டுக்கு இரண்டு நாற்களுக்கு முன் ஒலுவில் பிரதான வீதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டது. பாலமுனை மாநாட்டுக்கு யாரும் போகக் கூடாது. நமது ஊருக்கு ஒரு தீர்வை கொடுக்கும்வரை என்ற வசனம் எழுதப்பட்ட போஸ்டர்கள்.
ஆனால் மாநாட்டில் ஒன்றுமே பேசப்படவில்லை ஜனாதிபதியுடன்.
எல்லாமே மாநாட்டிற்கு ஆள் சேர்ப்பதற்கான நடிப்புத்தான் என்பது ஓரிரு நாட்களில் தெரிய வந்தது அந்த மக்களுக்கு.
இப்படி எத்தனையே கஸ்டங்களை தாங்கி கொண்டிருந்த அந்த ஊர் மக்கள், பொது அமைப்புக்கள், இளைஞசர்கள், பள்ளி நிர்வாகிகள் என்று எல்லோரும் சேர்ந்து தனது ஊரில் இருப்பதையாவது பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஒன்று சேர்ந்து மாபெரும் ஆர்பாட்டத்தை ஏற்பாடு செய்தார்கள். அதை அனைத்து மீடியாக்களும் காட்சி படுத்தியது.
அதன் பிறகு ஜனாதியின் பணிப் பெயரில் ஒரு குழுவை அமைத்து. அதற்கான தீர்வை எடுக்குபடி வேண்டியதன் நிமிர்த்தம்தான்.
உங்கள் ஹக்கிம் கூட்டம் அள்ளிக் கட்டிக் கொண்டு வந்து அந்த கற்கள் போட்டதும். போட்டோ எடுத்ததும், விடியோ எடுத்ததும் அதை உங்களைப் போன்றவர்கள் ஏதோ மலையை பிளந்து விட்டார் என்பது போல் பார்த்தனும் என்பதே உண்மை. ஆனால் அந்த மக்களின் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாத ஒன்றாகவே கிடப்பில் கிடக்கு.
கற்கள் பேட்டது கூட முற்றாக இன்னும் தீர்க்கபட வில்லை. ஒரு குறிப்பிட்ட பகுதிக்கே கற்கள் போடப்பட்டது என்பதை உங்களைப்போன்ற மேதைகளுக்கு சொல்ல விரும்புகிறேன் பழில் ஸேர்.
குறிப்பு:- இது ஒரு சுருக்கமாக சொன்ன விடயம்தான். விபரமாக சொல்லப்போனால் இன்னும் பல பக்கங்கள் எழுத வேண்டி வரும்.
தேவைப்பட்டால் அதையும் எழுத தயங்க மாட்டேன் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.
இப்ப சொல்லுங்கள் ஸேர் வெட்கப்பட வேண்டியவர் உங்கள் தலைவரா? இல்லை தலைவர் செய்வதை சரி என்று சொல்லும் உங்களைப்போல பட்டம் வாங்கியவர்களா?
ஊருக்கும் உலகிற்கும் பொய் சொல்லிக் கொண்டு"முழு பூசணிக்காயையும் ஒரு பிடி சோற்றில்" மறைப்பதற்கு பக்கம் பக்கமாக தலைவர் விடுகின்ற பிழைகளை நியாயப் படுத்தி எழுதும் நீங்கள் முதலில் மனசாட்சியை தொட்டு கேளுங்கள். அப்போது வெட்கப்படுவது நானா? நீங்களா என்பது புரியும்.
பழில் ஸேர் பதவிகளுக்கு ஆசைப்பட்டு கதை சொல்லிக் காலத்தை கடத்தாமல். உங்கள் திறமையைக் கொண்டு ஆகக் குறைந்தது அட்டாளைச்சேனை மக்களுக்காவது நல்லது செய்யப் பாருங்கள். அதுவே உங்கள் எதிர்கால அரசியலுக்கு நல்லது.

#ஒலுவில் #ஜெலில்                                       

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top