அப்துல் கலாம் சிலை அருகே பகவத் கீதை
எதிர்ப்பு வெளியானதை அடுத்து
இன்று காலை பைபிள் மற்றும் குர் ஆன்
கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை
27-ம் திகதி, முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் மாணவர்களிடையே உரையாற்றிக்கொண்டிருந்தபோது உயிர் பிரிந்தது. அவரது உடல், மூன்று நாட்களுக்குப் பிறகு ராமேஸ்வரம் அருகே உள்ள பேய்க்கரும்பு என்னுமிடத்தில் அடக்கம்செய்யப்பட்டது.
அப்துல் கலாம் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தினால் தேசிய நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதை கடந்த
27-ம் திகதி இந்திய பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதனிடையே, அப்துல் கலாமின் நினைவிடத்தில், அவரது சிலை அருகே பகவத் கீதை வைக்கப்பட்டிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. குறிப்பாக, எதற்காக பகவத் கீதையை மட்டும் வைக்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், அப்துல் கலாம் சிலை அருகே இன்று காலை பைபிள் மற்றும் குர் ஆன் வைக்கப்பட்டுள்ளது. பகவத் கீதை வைக்கப்பட்டதால் எழுந்த சர்ச்சையை அடுத்து, குர் ஆன் மற்றும் பைபிள் வைக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment