2017.07.18 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவையில்

எடுக்கப்பட்ட முடிவுகள்

அமைச்சரவை தீர்மானங்கள்




01. பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து தேவையினை பூர்த்தி செய்வதற்கு பயன்படுத்துவதற்கு பேரூந்துகளை கொள்வனவு செய்தல் (நிகழ்ச்சி நிரலின் விடய இல. 05)

'பிள்ளைகளை பாதுகாப்போம்' தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள நியம வேலைத்திட்டமொன்றாக 12.86 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் பயணிகள் போக்குவரத்து பேரூந்துகள் 04 இனை கொள்வனவு செய்து வடமத்திய மாகாண மாணவர்களின் போக்குவரத்து தேவையினை பூர்த்தி செய்வது தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

02. இளைய கமத்தொழில் முயற்சியாளர்களை உருவாக்குதல் (விடய இல. 06)

இந்நாட்டின் விவசாயத்துறையின் பின்னடைவிற்கு இளைய கமத்தொழில் முயற்சியாளர்கள் உள்நுழையாமையே முக்கிய காரணம் என இனங்காணப்பட்டுள்ளது. வாழ்வாதாரம் உட்பட பல சமூக காரணிகளினாலேயே அவ்விளைஞர்கள் குறித்த துறையில் உள்நுழைய மறுக்கின்றனர். வணிக மட்டத்தில் கமத்தொழிலில் ஈடுபடுவதற்கு முடியுமான தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் வேலைத்திட்டமொன்றை 'உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டம்' கீழ் செயற்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள அதன் நியம வேலைத்திட்டத்தின் கீழ், குருணாகல் மாவட்டத்தில் தெரிவு செய்யப்படுகின்ற இளைய தொழில் முயற்சியாளர்கள் 100 பேருக்காக நவீன விவசாய தொழில்நுட்ப உபகரணங்கள் உட்பட ஏனைய வளங்களை பெற்றுக் கொள்வதற்காக கடன் வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கும், அவ்வேலைத்திட்டத்தின் வெற்றியின் அடிப்படையில், வடமேல், வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து 1000 இளைஞர் தொழில் முயற்சியாளர்களுக்கும், அதற்கு அடுத்த கட்டமாக நாடு முழுவதும் உள்ள 10,000 இளைஞர்களை இணைத்துக் கொண்டு இவ் வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கும் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

03. Millennium Challenge Corporation – MCCமற்றும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே வழங்குதல் மற்றும் செயற்படுத்தல் தொடர்பான ஒப்பந்தம் (விடய இல. 08)

Millennium Challenge Corporation – MCC மூலம் இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்துக்கு காரணமாக அமைகின்ற வகையில் முக்கியத்துவம் பெறுகின்ற துறைகள் சிலவற்றை அபிவிருத்தி செய்வதற்காக 7.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடையினை அடுத்து வருகின்ற 05 வருட காலத்தினுள் பெற்றுக் கொடுப்பதற்கு எதிர்பார்க்கின்றது. அந்நன்கொடையினை பெற்றுக் கொள்வதற்கும் அதன் கீழுள்ள வேலைத்திட்டங்களை செயற்படுத்துவது தொடர்பில் Millennium Challenge Corporation – MCC மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

04. பாதுகாப்பு சேவை கட்டளையிடல் மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் பணியாளர்களுக்காக விடுதி வசதிகளை செய்து கொடுத்தல் (விடய இல. 09 மற்றும் 10)

பாதுகாப்பு சேவை கட்டளையிடல் மற்றும் பணியாளர்கள் கல்லூரியினை மிகவும் பயனுள்ள வகையில் முன்னெடுத்துச் செல்வதற்காக அதன் பணியாளர் தொகுதியினுள் உள்ளடங்குகின்ற முப்படையின் சிரேஷட அதிகாரிகளற்ற அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவிகளுக்கு உரிய அதிகாரிகளுக்காக விடுதி வசதிகளை வழங்குவது தொடர்பில் புதிய இரண்டு மாடி கட்டிடம் மற்றும் நான்கு மாடி கட்டிடம் ஆகியவற்றை நிர்மாணிப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

05. ஓசோன் படைக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் ஹைட்ரோகுளோரோபுளொரோகாபன் (Hydrochloroflurocabons - HCFC)  பாவனையில் இருந்து அகற்றுதல் (விடய இல. 11)

ஓசோன் படைக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் ஹைட்ரோகுளோரோபுளொரோகாபன் (Hydrochloroflurocabons - HCFC) இரசாயன பதார்த்த இறக்குமதியினை மட்டுப்படுத்துவதற்காக குறுகிய கால மற்றும் நீண்ட கால தீர்வுகளை முன்வைப்பதற்காக அமைச்சரவையினால் 2016-08-16ம் திகதி தொழில்நுட்ப குழுவொன்று நியமிக்கப்பட்டது. பின்வரும் சிபார்சுகள் உள்ளடங்களாக குறித்த குழு முன்வைத்த சிபார்சுகளை செயற்படுத்துவது தொடர்பில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மொன்ட்ரியல் இணக்கத்தின் குறிப்பிடப்பட்டுள்ள ஓசோன் படையை தாக்கும் இரசாயன பதார்த்தங்கள் அடங்கிய உபகரண தொகுதிக்கு உரித்தான பயன்படுத்தப்பட்ட மற்றும் மீளமைக்கப்பட்ட உபகரணங்கள் இறக்குமதி செய்வதை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடைசெய்தல்.

• Global Warming Potentialஆனது 100 பாகையும் மற்றும் Ozone Depleting Potential ஆனது 0.03 வீதத்தையும் கடந்து செல்லுகின்ற ஹைட்ரோகுளோரோபுளொரோகாபன் இரசாயன பதார்த்தத்தை கொண்டு உருவாக்கப்படுகின்ற உபகரணங்கள் மற்றும் பாகங்களை இறக்குமதி செய்தல், இலங்கையில் தயாரித்தல் மற்றும் சேகரித்தல் ஆகியவற்றை 2018-01-01ம் திகதி முதல் தடை செய்தல்.

• Global Warming Potential ஆனது 100 பாகையும் மற்றும் Ozone Depleting Potential ஆனது 0.03 வீதத்தையும் கடந்து செல்லாத ஹைட்ரோகுளோரோபுளொரோகாபன் இரசாயன பதார்த்தத்தை கொண்டு உருவாக்கப்படுகின்ற உபகரணங்கள் மற்றும் பாகங்களை இறக்குமதி செய்தல், இலங்கையில் தயாரித்தல் மற்றும் சேகரித்தல் ஆகியவற்றை 2021-01-01ம் திகதி முதல் தடை செய்தல்.

குளிர்சாதன பெட்டிகள் மற்றும் குளிரூட்டிகள் போன்ற உபகரண சேவை மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளi மேற்கொள்ளும் நிர்வனங்களுக்காக சூழல் பாதுகாப்பு அனுமதிபத்திரங்களை வழங்கும் போது, Refrigerant Recovery & Recycling Machine உபகரணம் ஒன்றினை இருப்பது கட்டாயம் எனும் நிபந்தனை 2019-01-01 ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சேர்த்துக் கொள்ளல்.

06. வெமெடில்ல நீர்தேக்கத்தினால் மூழ்கியுள்ள இடங்களுக்கு பதிலாக பெற்றுக் கொடுக்கப்பட்ட இடங்கள் மொரகஹகந்தை வேலைத்திட்டத்துக்கு பெற்றுக் கொள்ளப்பட்டமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈட்டினை பெற்றுக் கொடுத்தல் (விடய இல.12)

வெமெடில்ல நீர்தேக்கத்தினால் மூழ்கியுள்ள இடங்களுக்கு பதிலாக பெற்றுக் கொடுக்கப்பட்ட இடங்கள் மொரகஹகந்தை வேலைத்திட்டத்துக்கு பெற்றுக் கொள்ளப்பட்டமையினால் பாதிக்கப்பட்ட 53 பேர்களுக்கு மாற்று இடங்களை வழங்குவதற்கு பதிலாக நட்ட ஈட்டினை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


07. வாகன அனுமதிபத்திரங்களை வழங்குவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற பிரயோக பரீட்சையினை மிகவும் தரமான மற்றும் பயனுள்ள வகையில் மேற்கொள்வதற்கான செயன்முறையொன்றை தயாரித்தல் (விடய இல. 16)

வாகன அனுமதிபத்திரங்களை வழங்குவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற பிரயோக பரீட்சையினை மிகவும் தரமான மற்றும் பயனுள்ள வகையில் மேற்கொள்வதற்கான உகந்த செயன்முறை தொடர்பில் ஆராய்ந்து சிபார்சுகளுடன் கூடிய அறிக்கையொன்றினை பெற்றுக் கொள்வதற்கு உரிய நிர்வனங்களின் அதிகாரிகள் அடங்கிய அதிகாரிகள் குழுவொன்றினை நியமிப்பது தொடர்பில் போக்கவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

08. 'செவன' அதிஷ்ட சீட்டின் வெற்றிப் பரிசாக புதிய வீடொன்றை வழங்குதல் (விடய இல. 19)

'செவன' எனும் பெயரில் புதிய லொத்தர் சீட்டொன்றினை 2017-06-23ம் திகதி அனுஷ;டிக்கப்பட்ட தேசிய வீடு தினத்தினை ஒட்டியதாக சந்தைக்கு அறிமுகமாக்கப்பட்டது. இச்சீட்டிலுப்பின் வெற்றிப் பரிசாக அனைத்து வசதிகளுடன் கூடிய வீடொன்றினை பெற்றுக் கொடுப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சு மற்றும் தேசிய வீடு அபிவிருத்தி அதிகார சபையினால் சிபார்சு செய்யப்படுகின்ற நிர்வனமொன்றின் மூலம் பரிசுகளுக்காக வழங்கப்படுகின்ற வீடுகளை கொள்வனவு செய்வதற்கும், இச்சீட்டின் விற்பனை வருவாயின் மூலம் பெறப்படுகின்ற நிதியினை செவண நிதியத்துக்கு பெற்றுக் கொடுப்பதற்கும் வெளிவிவகார அமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. வெள்ளப்பெருக்கு அனர்த்த சந்தர்பங்களின் போது பாதிப்பு உள்ளாகின்ற நபர்களின் உயிர்களை காப்பாற்குவதற்காக வேண்டி பயன்படுத்துவதற்காக 100 விசேட படகுகளை உற்பத்தி செய்து கொள்ளல் (விடய இல. 20)

வெள்ளப்பெருக்கு அனர்த்த சந்தர்பங்களின் போது பாதிப்பு உள்ளாகின்ற நபர்களின் உயிர்களை காப்பாற்குவதற்காக வேண்டி பயன்படுத்துவதற்கு உகந்த விசேட படகுகொன்று கடற்படையினால் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 10 பேருக்கு பயணிப்பதற்கு உகந்த வகையில் அமைக்கப்பட்டுள்ள குறித்த படகுகளில் 100 இனை கடற்படையினரால் உற்பத்தி செய்து கொள்வதற்கும், வெள்ளப்பெருக்கு அவதானம் கூடிய பிரதேசங்களை இனங்கண்டு அப்பிரதேசங்களுக்கு அருகில் குறித்த படகுகளை நங்கூரமிடுவதற்கும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. தேசிய சுகாதார கொள்கை (விடய இல. 21)

ருniஎநசளயட ர்நயடவா ஊழஎநசயபந இனை அடிப்படையாகக் கொண்டு பின்வரும் பிரதான கொள்கை மயமான மேற்பார்வையிகை இனங்கண்டு, 2016-2025 காலப்பிரிவிற்காக தயாரிக்கப்பட்டுள்ள 'தேசிய சுகாதார கொள்கையினை' தொடர்பில் சுகாதார, போசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சுகாதார நிவாரணங்களின் குறிக்கோளினை அடைந்துக் கொள்வதற்காக வேண்டி சேவை வழங்குவதை பலப்படுத்தல்.

இலங்கையின் அனைத்து பிரஜைக்கும் பெறக்கூடியவகையிலான சிகிச்சை சேவையினை அளித்தல்.

தரமான புனருத்தாபன சிகிச்சை சேவைக்காக சாதாரண நுழைவு முறையினை முன்னெடுத்தல்.

தொடர்ச்சியான மருத்துவ சேவை வழங்குவதை பலப்படுத்துவதற்காக வேண்டி சேவை வழங்கும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு திட்டமிடல் செயன்முறையொன்றை ஸ்தாபித்தல்.

நோயாளர்களுக்கு தனிப்பட்ட முறையில் பணம் செலவிடுவதற்கு ஏற்படுகின்ற நிலைமைகளை குறைத்து புதிய உபாயமுறையொன்றினை அபிவிருத்தி செய்தல் மற்றும் நிதி வசதிகளை வழங்குதல்.

மனித வள முகாமைத்துவம் உட்பட மிகவும் சிறந்த மறுசீரமைப்பின் மூலம் பரந்த சுகாதார முறையொன்றை பாதுகாத்தல்.

அனைத்து சுகாதார சேவைகளை வழங்கும் பிரிவினருடனும் சுமுகமான முறையில் இணைந்து செயற்படல்.

11. ரண்மினிதென்ன தேசிய டெலி சினிமா கிராமத்திற்காக நிர்வாக சபையொன்றை நியமித்தல் (விடய இல. 23)

ரண்மினிதென்ன தேசிய டெலி சினிமா கிராமத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற பணிகளை மிகவும் பலனுள்ள வகையில் முன்னெடுத்துச் செல்வதற்காக வேண்டி கலைஞர்கள் மற்றும் குறித்த நிர்வனத்தின் அதிகாரிகள் அடங்கிய நிர்வாக சபையொன்றை நியமிப்பது தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. சாலாவ நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்காக காணிகளை சுவீகரித்தல் (விடய இல. 27)

சாலாவ நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்காக விசேட குழுவின் மூலம் சிபார்சு செய்யப்பட்டுள்ள விடயங்களை துரித கதியில் மேற்கொள்வதற்கு, இலங்கை இராணுவத்தினரின் இணக்கத்துடன் சாலாவ இராணு முகாம் பூமியில் அமைந்துள்ள 04 ஏக்கர், 02 ரூட், 24.40 பேர்ச்சஸ் காணியினை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு இலவச கொடுப்பனவு முறையில் பெற்றுக் கொள்வது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. நீர்ப்பாசன பயிற்சி நிர்வனத்தின் மூலம் சர்வதேச மட்டத்திலான பயிற்சி நெறிகள் மற்றும் செயலமர்வுகளை நடாத்துதல் (விடய இல. 33)

சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனம், சர்வதேச நீர் மத்திய நிலையம் ஆகிய நிறுவனங்களையும் இணைத்துக் கொண்டு கொத்மலை, நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவம் தொடர்பான சர்வதேச பயிற்சி நிறுவனம் (KITI-IWM) மற்றும் கல்கமுவ, நீர்ப்பாசன பயிற்சி நிறுவனம் ஆகியவற்றினுள் சர்வதேச மட்டத்திலான பயிற்சி பாடநெறிகளை நடாத்துவதற்கு தேவையான வசதிகள் மற்றும் நிர்வாக, நிதி செயன்முறையொன்றை தயாரித்;துக் கொள்வது தொடர்பில் நீர்ப்பாசன மற்றும் நீர்வளங்கள் முகாமைத்துவ அமைச்சர் கௌரவ விஜித் விஜயமுனி செய்சா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. 1978ம் ஆண்டு 02ம் இலக்க நீதிமன்ற கட்டமைப்பு சட்டத்தினை திருத்தம் செய்தல் (விடய இல. 34)

தற்போது நியமிக்கப்பட்டுள்ள சமாதான நீதவான்கள், தாம் நியமனங்களை பெறும் போது வசித்த பிரதேச செயலாளர் பிரிவிற்கு உரிய நிர்வாக மாவட்டத்திற்காக நியமிக்கப்பட்டுள்ளார் என கருத வேண்டும் என தெரிவிப்பதற்கும், சமாதான நீதவான்களுக்கான ஒழுக்க நெறிக் கோவையொன்றினை செயற்படுத்தும் நோக்கில் அவர்களின் சேவையினை இடைநிறுத்தல், இரத்து செய்தல் மற்றும் நிறுத்துதல் போன்ற அம்சங்களை உள்ளடக்கி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் 1978ம் ஆண்டு 02ம் இலக்க நீதிமன்ற கட்டமைப்பு சட்டத்தினை திருத்தம் செய்வதற்காக சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்குவது தொடர்பில் நீதி அமைச்சர் கௌரவ (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் (விடய இல. 42)

வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு 500 மில்லியன் ரூபா செலவில் மீள குடியமர்த்துவதற்கு பொருத்தமான காணிகளை இனங்கண்டு புதிய வீடுகளை அமைப்பதற்கும், பாதிப்பு உள்ளான ஏனைய வீடுகளுக்காக கூறைத்தகடுகளை பெற்றுக் கொடுப்பதற்கும், அனர்த்தங்களினால் அவதியுறுகின்ற தோட்ட பிரதேசங்களை அண்டியதாக கழிவகற்றல் தொகுதிகளை ஸ்தாபிப்பதற்கும், நீர் வழங்கல் செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கும், நீர் தாங்கிகளை பெற்றுக் கொடுப்பதற்கும், அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர் அபிவிருத்தி மத்திய நிலையங்களை விருத்தி செய்வதற்கும் மலையக புதிய கிராமங்கள், அடிப்படை வசதிகள் மற்றும் பிரஜைகள் அபிவிருத்தி அமைச்சர் பி. திகாம்பரம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. கொழும்பு மற்றும் ஜனநெருக்கடி பிகுந்த பிரதேசங்களில் முறையற்ற முறையில் திண்மக் கழிவுகளை அகற்றுவதை தடுத்தல் மற்றும் டெஙகு நோய் தொற்றல் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கை (விடய இல. 44)

அதனடிப்படையில் கௌரவ பிரதமர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட பின்வரும் தீர்மானங்களை செயற்படுத்துவது தொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் கௌரவ பைசல் முஸ்தபா மற்றும் சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சாகல ரத்னாயக ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முறையற்ற முறையில் கழிவகற்றும் பொது இடங்களை மேற்பார்வை செய்வதற்காக வேண்டி ஊஊவுஏ கெமராக்களை பொருத்துதல் மற்றும் அவற்றில் இருந்து பெறப்படுகின்ற ஒளிப்பதிவுகளை கையடக்கத் தொலைபேசி வாயிலாக கட்டுப்பாட்டறை அதிகாரிகளுக்கு மேற்பார்வை செய்யக் கூடிய செயன்முறையொன்றை தயாரித்தல்.

கொழும்பு மற்றும் சன நெருக்கடி மிகுந்த பிரதேசங்களில் அமைந்துள்ள அனைத்து நிர்மாண கட்டிடங்களிலும், அந்நிர்மாண நடவடிக்கைகளின் சட்ட ரீதியான உரிமையாளர், ஒப்பந்தக்காரர் மற்றும் ஏனைய உரிய தகவல்கள் அடங்கிய பெயர் பலகையினை தயாரித்தல் அவசியமாகும்.

பாடசாலைகள், அரச நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களில் டெங்கு நுளம்புகள் பரவும் வகையில் இடம் கொடுக்கும் நபர்களுக்கு எதிராக அவர்களின் பெயர்களிலேயே தனியார் வழக்கு தொடரல்.

உள்நுழைவதற்கு கடினமாக முறையில் முடி காணப்படும் வீடுகள் மற்றும் சொத்துக்களினுள் உள்நுழைந்து பரிட்சிப்பதற்கும், அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்வதற்கும் ஏற்ற வகையில் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விதிமுறைகளை விதித்தல்.

கட்டுப்பாட்டு அறையினை 24 மணி நேரமும் செயற்படுத்துவதற்கு அவசியமான அதிகாரிகளை அனுமதித்து அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தல்.

17. களுத்துறை தாதியர் பயிற்சி பாடசாலையில் கல்வியல் மற்றும் நிர்வாக கட்டிடத்தை நிர்மாணித்தல் (விடய இல. 47)

இடப்பற்றாக்குறையுடன் இயங்கி வருகின்ற களுத்துறை தாதியர் பயிற்சி பாடசாலையில் கல்வியல் மற்றும் நிர்வாக கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு தேவையான ஒப்பந்தத்தை 714.2 மில்லியன் ருபா மதிப்பீட்டு செலவில் (வரியுடன்) வழங்குவது தொடர்பில் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

18. இலங்கை துறைமுக அதிகாரசபையின் துயலய ஊழவெயiநெச வுநசஅiயெட இனை நவீனமயப்படுத்தல் (விடய இல. 48)

இலங்கை துறைமுக அதிகாரசபையின் துயலய ஊழவெயiநெச வுநசஅiயெட இன் ஐந்தாம் கட்டத்தினை நவீனமயப்படுத்துவது தொடர்பில் துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சர் கௌரவ மஹிந்த சமரசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

19. இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினை பலப்படுத்தல் (விடய இல. 46 மற்றும் 50)

இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினை பலப்படுத்துவதற்கு ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்க திணைக்கள பணியகம் இணக்கம் தெரிவித்துள்ளது. அதன்படி குறித்த பணியினை முன்னெடுப்பதற்கு அந்நிர்வனம் 235,000 அமெரிக்க டொலர்களை (கிட்டத்தட்ட 35.25 மில்லியன் ரூபா) வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. அதன்படி குறித்த தொகையினை பெற்றுக் கொள்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

20. இலங்கையில் அனர்த்த முகாமைத்துவ செயன்முறையினை மிகவும் செயற்றிறன்மிக்க மற்றும் மிகவும் பயனுள்ள முறையில் மேற்கொள்வதற்காக ஆலோசனை சேவையினை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 51)

இலங்கையில் அனர்த்த முகாமைத்துவ செயன்முறையினை மிகவும் செயற்றிறன்மிக்க மற்றும் மிகவும் பயனுள்ள முறையில் மேற்கொள்வதற்காக ஆலோசனை சேவையினை பெற்றுக் கொள்வதற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அவர்களின் தலைமையிலாலான, இவ்விடயத்துடன் தொடர்புபட்ட நிபுணத்துவம் பெற்றவர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

21. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்துடன் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு துரித கதியில் தீர்வினை பெற்றுக் கொடுத்தல் (விடய இல. 49)

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்துடன் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு துரித கதியில் தீர்வினை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் அது தொடர்பில் தேடியறிந்து அமைச்சரவைக்கு அறிக்கையொன்றை முன்வைப்பதற்காக மீன்பிடி மற்றும் நீர் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களின் தலைமையிலான அமைச்சரவை உப குழுவொன்று 2017-06-27ம் திகதி அமைச்சரவை கூட்டத்தின் போது நியமிக்கப்பட்டது. அதனடிப்படையில் குறித்த குழுவினர் உரிய இடத்துக்கு சென்று பார்வையிட்டு, உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர், குறித்த திட்டத்தினால் பாதிக்கப்படுகின்ற பொதுமக்களுக்காக நிவாரணங்கள் வழங்குவதற்கு உகந்த முறைகள் அடங்கிய சிபார்சுகளை உடனடியாக செயற்படுத்துவது தொடர்பில் மீன்பிடி மற்றும் நீர் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அமைச்சரவை அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

உரிய ஆய்வுகளினை மேற்கொண்டு பொருத்தமான இடங்களுக்கு அருகில் பாரியளவிலான 06 நிலக்கீழ் கிணறுகளை துரித கதியில் நிர்மாணித்தல்.

இதுவரை நீர் தாங்கிகள் பெற்றுக் கொடுக்கப்படாத குடும்பங்களுக்கு அடுத்த இரு வார காலத்திற்குள் நீர்தாங்கிகளை பெற்றுக் கொடுப்பதற்கு விசேட செயன்முறையொன்றை செயற்படுத்தல்.

நீர் பகிர்ந்தளிப்பு முறையினை மேலும் பலப்படுத்துவதற்காக உள்நாட்டலுகல்கள் அமைச்சின் கீழ் காணப்படும் 20 நீர் பவுசர்களை பதுளை மாவட்ட செயலாளருக்கு உடனடியாக விடுவித்தல்.

பாதிக்கப்பட்டுள்ள சொத்துக்களுக்கான நட்ட ஈடு வழங்கும் செயன்முறையினை துரிதப்படுத்தல்.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் விசேட பிரிவொன்றினை ஸ்தாபித்து சேவையினை விஸ்தரித்தல்.

பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பிரதேச வீதிகளை உடனடியாக புனரமைப்பதற்காக 100 மில்லியன் ரூபாய்களை மாகாண சபைக்கு விடுவித்தல்.

நிவாரண பணிகளை பலனுள்ள விதத்தில் முன்னெடுத்துச் செல்வதற்காக ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டுள்ள 'ஜன சகன செயலகம்' இனை மேலும் பலப்படுத்தல்.

நிவாரண நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் இரு வாரங்களுக்கு ஒரு முறை மற்றும் மாதாந்தம் அறிக்கை சமர்பித்தல்.

முன்மொழியப்பட்டுள்ள பண்டாரவெல நீர் யோசனை திட்டத்தின் நிர்மாண பணிகளை முன்னெடுப்பதற்காக 2018ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கிக் கொள்ளல்.

பாதிக்கப்பட்டுள்ள சிறு குளங்களை மறுசீரமைப்பு செய்வதற்காக வேண்டி 100 மில்லியன் ரூபா நிதியினை ஓதுக்கிக் கொள்ளல்.

மீள் குடியேறுவதற்காக இனங்காணப்பட்டுள்ள காணிகளின் உரிமைகளை பண்டாரவெல பிரதேச செயலாளரின் ஊடாக குறித்த குடும்பங்களுக்கு துரித கதியில் வழங்கல்.

பாதிக்கப்பட்டுள்ள பாடசாலைகளை இனங்கண்டு அவற்றினை துரித கதியில் திருத்தம் செய்து வழமையான நிலைமைக்கு கொண்டு வருவதற்கு தேவையான நிதியினை பெற்றுக் கொள்ளல்.

பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள வீட்டுக் கடன் மற்றும் பயிர்செய்கை கடன் தவனைகளை மீண்டும் செலுத்துவதற்காக இரு வருட சலுகை காலத்தை பெற்றுக் கொடுத்தல்.

பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் விசேட மாற்று வாழ்வாதார அபிவிருத்தி திட்டமொன்றை துரித கதியில் தயாரித்தல்

சுரங்க மார்க்கத்தில் ஏற்பட்டுள்ள நீர் கசிவினை மூடிவிடுவதற்காக வேண்டி ஈரானின் கம்பனியின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளல்.

வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை, சர்வதேச விசேட நிபுணர்களின் சிபார்சுகள் மற்றும் உள்நாட்டு விசேட நிபுணர்களின் குழுவின் மூலம் பெறப்பட்ட சிபார்சுகள் ஆகியவற்றை மாத்திரம் வைத்துக் கொண்டு முன்னெடுத்தல்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top