அல் அக்ஸா பள்ளிவாசலில் நடத்திய பாதுகாப்பு சோதனை
எதிர்த்து போராடிய 3 பாலஸ்தீனியர்கள் பலி
ஜெருசலேம் நகரில் உள்ள புனித அல் அக்ஸா பள்ளிவாசலின் வெளியே நடத்தப்பட்ட பாதுகாப்பு சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலிய பொலிஸார் தாக்குதல் நடத்தினர்.
இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் முஸ்லிம்களின் மூன்றாவது புனித ஸ்தலமான அல் அக்ஸா பள்ளிவாசல் உள்ளது. இங்கு பாலஸ்தீனைச் சேர்ந்த முஸ்லிம்கள் பிராத்தனையில் ஈடுபடுகின்றனர். கடந்த வாரம் இந்நகரில் பாதுகாப்பு பணியிலிருந்த இஸ்ரேலிய பெண் பொலிஸ் அதிகாரி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.
இதனால், பள்ளிவாசலுக்கு வெளியே மெட்டல் டிடக்டெர்கள் அமைத்து இஸ்ரேலிய பொலிஸார் அனைவரையும் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பாலஸ்தீனைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே கைக்கலப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, பொலிஸார் அங்கு கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். இதில், 3 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
0 comments:
Post a Comment