3 முறை பிரதமராக இருந்தும்
ஒரு முறை கூட
முழுமையடையாத நவாஸ் ஷெரீப் ஆட்சி
பாகிஸ்தானில்
தகுதி நீக்கம்
செய்யப்பட்ட நவாஸ்ஷெரீப் 3 முறை பிரதமராக இருந்தும்
ஒரு முறை
கூட அவர்
தனது பதவி
காலத்தை முழுமையாக
நிறைவு செய்யவில்லை.
பாகிஸ்தானில்
பிரபலமான வர்த்தக
குடும்பத்தில் 1949ம் ஆண்டில்
பிறந்தவர் நவாஸ்
ஷெரீப். பஞ்சாப்
பல்கலையில் பட்டம் பெற்ற அவர், தனது
தந்தையின் ஸ்டீல்
கம்பெனியை நடத்தினார்.
தொடர்ந்து அவர்
அரசியலில் ஈடுபட்டார்.நவாஸ் ஷெரீப்,
ஆளும் பிஎம்எல்
- என் கட்சி
தலைவராக உள்ளார்.
அவர் பாகிஸ்தானில்
பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற
போதிலும் ஒரு
முறை கூட
தனது ஆட்சி
காலத்தை முழுமையாக
நிறைவு செய்ததில்லை.
முதன்முறையாக
கடந்த 1990 முதல் 1993 வரை பிரதமராக நவாஸ்
பதவி வகித்தார்.
அப்போது,, ஜனாதிபதியாக இருந்த
குலாம் இஷாக்
கானுடன் கருத்து
வேறுபாடு அதிகரித்தது.
இதனால், அதிருப்தியடைந்த
ஜனாதிபதி தனது
சிறப்பு அதிகாரத்தை
பயன்படுத்தி 1993 ஏப்ரலில் பார்லிமென்ட்டை கலைத்தார். தொடர்ந்து
ஜூலையில், அவர்
ராணுவத்தின் நெருக்கடி காரணமாக பதவி விலகினார்.
அப்போது, நவாஸ்
ராணுவத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, ஜனாதிபதியும் பதவி
நீக்கம் செய்யப்பட்டார்.
பின்னர்
1997ல் இரண்டாவது
முறையாக பிரதமராக
பதவியேற்றார். 1999ல் ராணுவ
தளபதியாக இருந்த
முஷாரப், ஆட்சியை
கவிழ்த்து, அதிகாரத்தை கைப்பற்றினார். மேலும், நவாசை
சிறையில் அடைத்தார்.
பின்னர் நவாஸ்,
சவூதியில் தஞ்சம் அடைந்தார்.
2007 வரை அவர்
பாகிஸ்தான் திரும்பவில்லை.
கடந்த
2013ல் நடந்த
பொதுத்தேர்தலில் நவாஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக
திகழ்ந்தது. தொடர்ந்து, சுயேட்சை ஆதரவுடன் நவாஸ்
மீண்டும் பிரதமராக
பதவியேற்றார். 3வது ஆட்சி காலத்தில் அவர்
பல நெருக்கடியை
சந்திக்க நேரிட்டது.
ஊழல்
புகார் கூறி
இம்ரான் பார்லிமென்ட்டை
முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார். ராணுவ பள்ளியில்
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 150 பள்ளிக்குழந்தைகள் பலியானார்கள். தற்போது அவர் மற்றும்
குடும்பத்தினர், உறவினர்கள் மீதான ஊழல் புகார்
காரணமாக அவரை
சுப்ரீம் கோர்ட்
தகுதி நீக்கம்
செய்துள்ளது. அவர் ஆயுட்காலம் முழுவதும் பதவி
வகிக்க தடை
விதித்தும், குடும்பத்தினர் மற்றும் உறவினர் மீது
வழக்கு பதியவும்
உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு
காரணமாக பாகிஸ்தானில்
பதற்றம் ஏற்பட்டுள்ளது.
நவாஸ்
பதவி நீக்கம்
செய்யப்பட்டது நம்பிக்கையை ஏற்படுத்துவதாக
பாகிஸ்தான் டெக்ரிக் இ இன்சாப் கட்சி
இம்ரான் கான்
கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி முஷாரப்,
சுப்ரீம் கோர்ட்
தீர்ப்பை வரவேற்றுள்ளார்.
பாகிஸ்தானுக்கு மீண்டும் சென்று அரசியலில் ஈடுபடுவேன்.
அவரையும், அவரது
குடும்பத்தினரையும் உடனடியாக விசாரணை
நடத்த வேண்டும்
எனக்கூறியுள்ளார் முஷாரப்.
0 comments:
Post a Comment