புலிகள் உருவாக்கிய வனத்தில் முஸ்லிம்களை குடியேற்ற அனுமதிக்கப் போவதில்லை, குடியேற்றத்தை அமைப்பதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள பகுதிகள் விடுதலைப் புலிகளால் மிகவும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்த மரங்கள் உள்ள பகுதி என வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
1990 ஆம் ஆண்டு புலிகளால் துரத்தியடிக்கப்பட்டு சுமார் 27 வருடங்களாக அங்கும் இங்கும் அலைந்து அல்லல்படும் முஸ்லிம்களை முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான், கூழாமுறிப்பு பகுதியில் குடியேற்ற அனுமதிக்கப் போவதில்லை என்பதே இவரின் கருத்தாகும்.
இப்பகுதியில் புலிகள் உருவாக்கிய வனம் உள்ளதால் அதை பாதுகாக்கப் போகின்றார்களாம்.
புலிகள் உருவாக்கிய காடுகளைப் பாதுகாப்பதற்காக புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம் மக்களை மீள குடியேற்ற அனுமதிக்கப்போவதில்லை என இவர் போன்ற சில தமிழ் பிரமுகர்கள் பின்புறமாக இருந்து போராட்டம் நடத்துவதற்கு கருவிகளாக இருந்து செயல்படுகின்றார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட வனத்தை அழிக்க விடப்போவதில்லை, இதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான், கூழாமுறிப்பு பகுதியில் உள்ள காடுகளை அழித்து அந்த பகுதியில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை குடியேற்றுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில்தான் முஸ்லிம் குடியேற்றத்துக்கு எதிராக குரல் கொடுப்பேன் என வடமாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் குறிப்பிட்டுள்ளார்.
புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம் மக்களை குடியேற்றுவதற்காக விடுதலைப்புலிகள் உருவாக்கிய வனத்தை அழிக்க விடப் போவதில்லை என சிலர் இவ்வாறு தெரிவித்துள்ளதன் மூலம் புலிகளால் முஸ்லிம்கள் வட பகுதியிலிருந்து துரத்தப்பட்டதை தற்போதும் ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையே வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக நடு நிலையாளர்கள் இது குறித்து கவலை வெளியிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment