கொரிய நாட்டின் ஆயிரத்தி அறுநூறு மில்லியன் ரூபா
நிதியுதவியுடன் புனரமைப்பு செய்யப்படவுள்ள
வாழைச்சேனை
கடதாசி ஆலை
வாழைச்சேனை
கடதாசி ஆலை
கொரிய நாட்டு
நிதி உதவியுடன்
புனரமைப்பு செய்யப்படவுள்ளதாக கிராமிய பொருளாதார அபிவிருத்தி
பிரதி அமைச்சர்
எம்.எஸ்.எஸ்.அமீர்
அலி தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வர்த்தக
அமைச்சருமான றிஷாட் பதியுதீன்
தலைமையில் அண்மையில்
பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இது குறித்த கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
கொரிய
நாட்டின் ஆயிரத்தி
அறுநூறு மில்லியன்
ரூபா நிதியுதவியுடன்
இந்த புனரமைப்பு
பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
வாழைச்சேனை
கடதாசி ஆலையின்
வேலைகள் பூர்த்தியடையும்
சந்தர்ப்பத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு நேரடியாகவும்
மறைமுகமாகவும் தொழில்வாய்ப்புக்கள் ஏற்படும்
என்றும் பிரதி
அமைச்சர் மேலும்
தெரிவித்துள்ளார்.
இந்த
நிகழ்வில் பிரதி
அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர், வாழைச்சேனை
கடதாசி ஆலையின்
முன்னாள் நிறைவேற்று
தவிசாளர் மங்கள
செனரத், கொரிய
நாட்டின் சார்பாக
கிம் டக்
ஜோ ஆகியோர்
கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment