அண்ணணும் தம்பியாகவும் மாமனும் மச்சானுமாகவும் இரண்டரக் கலந்து வாழ்த தமிழ் முஸ்லிம் சமூகம் இன்று எதனை நோக்கி நகர்கின்றது.
முல்லைதீவு முஸ்லிம்கள் மீண்டும் தமது தாயக மண்ணில் குடியேறுவதற்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டமாம்
வாழ்விழந்து தவிக்கும் ஒரு சமூகம் தாம் வாழ்ந்த இடத்தில் மீண்டும் வாழச் செல்வது என்ன குற்றமெடா?
1990ல் பயங்கரவாத புலிகளால் விரட்டி அடிக்க பட்ட மக்கள் மீண்டும் தமது சொந்த மொழி பேசும் தமிழ் உறவுகளுடன் வாழ்வதில் என்ன தவறுள்ளது இந்த ஆர்பாட்டத்தை ஒழுங்கமைக்கும் இரக்கமற்ற பிறவிகளே!
அரச காணிகளில் அரச அதிகாரிகளின் அங்கீகாரத்துடன் முழுமையான சட்ட ஆவணங்களுடன் குடியேறும் இந்த மக்கள்
...உங்களுடைய சொந்த காணிகளிலா அத்துமீறி குடியேறுகின்றார்கள் அவர்களை தடுக்க
அன்று ஒரு குடும்பமாக வந்த தாய்குடும்பம் 27 வருடங்களின் பின்னர் 4,5 குடும்பங்களாக மாறி இருப்பதும் அவர்கள் இருப்பதற்கு புதிய இடம் தேவைப்படுவதும் சாதாரண விடயமே
அரச காணிகள் நிறைந்துள்ள முல்லை மண்ணில் அப்பகுதி மக்கள் குடியேறாது வேறு பகுதி மக்களா குடியேறுவது?
வாழ்விழந்து சென்ற சகோதர மக்கள் மீண்டும் பலத்த கனவுகளுடன் வாழ வரும்போது வாரி அணைத்து வாழ்வளிக்கும் உயரிய குணம் உள்ள தமிழ் உறவுகளா இதை எதிர்க்கின்றார்கள் எனும் போது தாங்கிக்கொள்ளாத ஆழ்ந்த துயர் எம்மைச் சூழ்ந்து கொள்கின்றது.
ஒரு சில குரோத குறுகிய அரசியல் புத்தி உடையவர்களின் நிகழ்ச்சி நிரழுக்காக தமிழ் முஸ்லிம் உறவில் விரிசல் ஏற்பட அனுமதிக்க முடியாது.
கடந்த கால நினைவுகளை மீட்டிப்பாருங்கள்
முள்ளுகம்பிக்குள் அடைக்கபட்டு பசி பட்டிணியால் வாடிய போது ஓடி வந்து உணவளித்தவன் யார் உங்களுக்கு?
உங்களின் இனத்தை சேர்ந்தவர்களே உங்களுக்கு எதிராக சுட்டு விரல் நீட்டி காட்டி கொடுப்புக்களையும் கழுத்தறுப்புக்களையும் செய்த போது அடிப்படை வசதி தந்து மீள குடியேற மனிதநேயத்துடன் உதவியவன் யார் என்று?
உங்களின் மனச்சாட்சியே சொல்லும் அன்று மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த உங்களின் சகோதர இனத்தவன் உங்களுடன் உறவாக வாழ்ந்தவன் றிஷாட் பதியுத்தீன் என்று.
நீங்கள் அவதியுறும் போதும் அல்லோல கல்லோலப்படும் போதும் அன்று ஓடி வந்த அதே உறவுக்காரன் இன்றும் உங்களுக்காக எத்தனையோ சேவைகளை செய்கின்றான்
முல்லையில் உங்களின் காணிகளை அரச படை ஆக்கிரமித்தபோது உங்களின் நியாயமான போராட்டத்தில் பங்கெடுத்தவன் றிஷாட் பதியுத்தீன் என்பதை நீங்கள் மறப்பதற்கு இடம் இல்லை.
இன்று முஸ்லிம் மக்களை குடியேற்றும் போது ஏன் அவரையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகின்றீர்கள்
உங்களைத்தான் அவர் முதலில் குடியேற்றினார் முன்னர் விரட்டபட்ட முஸ்லிம்களை குடியேற்ற வில்லை என்ற அவப்பெயரும் உண்டு அமைச்சர் றிஷாட் பதியுத்தீனுக்கு .
நன்றிக்கே வரைவிளக்கனம் சொல்லும் சமூகமல்லவா நீங்கள்.
இதே போன்று வடமாகாண சபை ஏன் முஸ்லிம் மக்கள் மீது கடக்கண்பார்வையை கையாள்கின்றது என்பதை நியாயமாக நீங்கள் கேட்டதுண்டா
முதலமச்சர் இந்த விடயத்தில் இழுத்தடிப்பு செய்வது ஏன்?
அன்பின் தமிழ் உறவுகளே தமிழ் அரசியல் தலைவர்களிடம் நீங்கள் ஏன் முஸ்லிம் மக்களையும் குடியமர்த்த வேண்டியதன் யதார்த்தத்தை உணர்த்தக்கூடாது
நாம் எப்போதும் முஸ்லிம் அரசியல் தலைவர்களிடம் உங்களின் விடயத்தில் கரிசனை காட்டுமாறு வழியுறுத்தியே வருகின்றோம்.
குறிப்பாக அமைச்சர் றிஷாட் பதியுதீனிடம் எடுத்துரைக்கின்றோம். அவர்களும் முடியுமான சேவைகளை செய்துதான் வருகின்றார்கள்.
ஒரு சில தமிழ் இளைஞ்சர்களை ஏவிவிட்டு தமது தனிப்பட்ட விடயத்தில் குளிர்காயும் நரிகளுக்கு நீங்கள் சோரம் போகாதீர்கள்.
"நாம் இனத்தால் வேறுபட்டாலும் மொழியாலும் இடத்தினாலும் ஒன்று பட்ட குடும்பமே"!
-ACM,FAISAL
0 comments:
Post a Comment