சர்வதேச பாம்புகள் தினம் இன்று...
உலகில் கிட்டத்தட்ட 3000 வகையான பாம்பு இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன கண்டறியப்படாதது இன்னும் எத்தனையோ எனத் தெரியாது!...
ஆனாலும் அவற்றில் உலக முழுவதிலும் சேர்ந்நு வெறும் 600 வகைப்பாம்புகளே நஞ்சுள்ளவையாக கண்டறியப்பட்டுள்ளன.....
இவற்றிலும் வெறும் 200 வகைப்பாம்புகளே மனிதனைக் கொள்ளும் அளவு விசம் உடையவை என்றால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்...
மற்றவையெல்லாம் மனிதனைக்கண்டு அஞ்சி ஒதுங்கியே உள்ளன.மனிதனின் இடையூறு இல்லாமல் எந்தப் பாம்புவகைகளும் மனிதனைச் சீண்டுவதே இல்லை...
பாம்புகள் சுமார் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே அவற்றின் மூதாதையர் இனத்திலிருந்து பரிணமித்து உருவானவை ஆனால் மனிதன் வெறும் இரண்டுலட்சம் ஆண்டுகளுக்கு முன்தான் ஆடையின்றித் தோன்றியவன் அவனுக்கு டெனிம் துணி பற்றியோ அல்லது மரவுரி பற்றியோ எதுவும் தெரியாது....
பாம்புகள் பற்றிய பழமொழியால் அவற்றின் மீது தீரா வெறுப்பிலுள்ள நமக்கு அவற்றின் படைப்பின் காரணத்தை உணர்ந்தால் பாம்பின்மீது மரியாதையே வரும்...
"பாம்பு என்றால் படையும் நடுங்கும்"
"காலைச்சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது"
"பாம்பைக் குட்டியிலேயே கொன்றுவிடு"
இதுவெல்லாம் பாம்பினைப் பற்றிய தமிழ்பழமொழிகள்!..
அப்படி என்னதான் பயம் எனத் தெரியவில்லை ஆனால் அதன்மீதான பயம் மனிதனுக்கு இன்றுவரை நீங்கவில்லை.
பயத்தின் இன்னொரு வடிவம் சரணாகதி அதன் விளைவுதான் சிலரின் பாம்பு வழிபாடு...
ஒன்றும் புரியவில்லை பாம்பை வழிபடுகிறோம் அதுவே நேரில் வந்தால் கல்லையும் கம்பையும் தூக்குகிறோம்...
ஒருபோதும் பாம்புகள் மனிதைத் தேடித் தேடி,துரத்தித் துரத்தி எல்லாம் இதுவரை கடித்ததாகத் தெரியவில்லை அதற்கு மனிதனைக் கடிக்க வேண்டிய அவசியமும் இல்லை ஏனெனில் விஷப்பாம்புகளின்இரை பட்டியலில் மனிதன் ஒருபோதும் இல்லை.
மனிதனைக் கடிப்பதென்றால் அது தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவே கடிக்க முயலும் அதுவும் நாம் அதை எந்தவித்த்திலாவது தாக்க முயன்றால் தான். முதலில் எச்சரிக்கை செய்யும் அதையும் தாண்டிய பின்பே கடிக்க முயல்கிறது.
கடிக்கிற எல்லாப் பாம்புகளுக்கும் விஷம் கிடையாது,உலகம் முழுவதும் 2,968 வகையான பாம்புகள் இருக்கிறது. இவற்றில் 62 வகை பாம்புகள் விஷத்தன்மை கொண்டவையாகும். இவற்றில் 4 வகையான பாம்புகள் மனிதர்களின் வசிப்பிடங்களைச் சுற்றி மட்டும் வாழும் தன்மை கொண்டவை
அவைகள்
நாகபாம்பு(நல்லபாம்பு)
கட்டுவிரியன், கண்ணாடிவிரியன் மற்றும் சுருட்டை விரியன்.
இவைகளில் நாகபாம்பானது,
பொதுவாக பழுப்பு, மஞ்சள் அல்லது கறுப்பு நிறங்களை கொண்ட நாகபாம்பு தமது தலையை உயர்த்தி படம் எடுக்கும்.ஒரு மீட்டர் நீளத்தில் பருவமடையும் இந்த பாம்பு 2.2 மீட்டர் நீளம் வளரும். நாகபாம்பின் விஷம் நரம்பு மண்டலத்தையும், சுவாச மண்டலத்தையும் தாக்கி மரணத்தை ஏற்படுத்தும்.இவை கைவிடப்பட்ட எலியின் வளை மற்றும் கரையான் புற்றுகளையும் வசிப்பிடமாக்கிவிடும்.
விஷத்தன்மை கொண்ட நாகப்பாம்பு கடித்தால் கண்டிப்பாக மரணம் என்பது மிகத்தவறான கருத்தாகும்... பெரும்பாலும் உயிர்போய்விடும் என்கிற பயமே மனிதனுக்கு சாவைக்கொண்டு வந்துவிடுகிறது...
பாம்புகள் பற்றிய மக்களின் தவறான கருத்துகள் உலவுகிறது அவை...
நாகபாம்பு மகுடியின் இசைக்கு தக்கபடி படம் எடுத்து ஆடும்.
நாகபாம்பும் சாரைப் பாம்பும் ஒரே இனத்தை சேர்ந்த ஆண் மற்றும் பெண் பாம்புகள்.
நாகபாம்பு நீண்டநாள் யாரையும் தீண்டாமல் இருந்தால் தலையில் நாகமாணிக்கம் உருவாகும்,அதன் ஒளியில் இரவில் இரைதேடும்.
நாகபாம்பையோ அல்லது வேறு வகை பாம்பையோ கொன்றுவிட்டால் அதன் இணை கொன்றவரை பழி வாங்கும் வரை காத்திருக்கும்(இந்த அறிவை மேலும் மெருகேற்றிக் கொண்டிருக்கும் தமிழ்சினிமாவிற்கு நன்றி)
பாம்புகள் பாலை விரும்பி குடிக்கும்.
மண்ணுளிப் பாம்புகளுக்கு இரண்டு தலைகள் உண்டு. அவைகள் கடித்தால் வெண்குஷ்டம் வரும்.
பச்சைப் பாம்பு கண்களை குறிபார்த்து கொத்தும்.
கொம்பேறி மூக்கன் மனிதனை கடித்து கொன்று விட்டு, மரத்தில் ஏறி அந்த மனிதன் உடல் எரிப்பதை பார்க்கும்.
இவ்வாறு நம்பப்படுகிற எதுவுமே உண்மையல்ல..
பாம்புகள் தினமான இன்று, நாம் ஒரு உறுதியை ஏற்றுக்கொள்ள வேண்டும். பாம்புகளை பாதுகாக்காவிட்டாலும் பரவாயில்லை. குறைந்த பட்சம் தொந்தரவு கொடுக்க மாட்டோம். குடியிருப்பு பகுதிகளில் பிடிபடும் பாம்புகளை கொல்லாமல், அவற்றை வனத்துறை மூலமாக முறையாக வனப்பகுதியில் விடுவதற்கு நடவடிக்கை எடுப்போம் என்ற உறுதியை ஏற்றுக்கொண்டால், உயிர்சங்கிலி இன்னும் உறுதியாகும்''
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.