இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் Z.M ஸாஜித் தலைமையில்

Win Mind 2017 இலவச கல்வி கருத்தரங்கு

( ஜி.முஹம்மட் றின்ஸாத் )

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் 20.07.2017 (வியாழன்) அன்று கிழக்கில் முதல் முறையாக Win Mind 2017 இலவச கல்வி கருத்தரங்கு மற்றும் போட்டி பரீட்சைக்கான வழிகாட்டியும் அம்பாறை மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும், மற்றும் இலங்கை இளைஞர் கூட்டணி (Youth Alliance Sri Lanka) அமைப்பின் தலைவருமான Z.M ஸாஜித் தலைமையில் இடம் பெற்றது.
இவ் நிகழ்வில் விரிவுரையாளராக சட்டத்தரணியும் IDM கல்வி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான விநாயகமூர்த்தி ஜனகன் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது.
இக் கருத்தரங்கில் பல மாவட்டங்களிலும் மற்றும் பல ஊர்களிருந்தும் 250 க்கும் மேற்பட்ட இளைஞர்கள், யுவதிகள் பங்குபற்றினார்கள்.
குறித்த கருத்தரங்கு முன்னாள் கல்முனை மாநகர சபை மேயரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தேசிய அமைப்பாளரும், லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவருமான கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இடம் பெற்றதோடு இக் கருத்தரங்கை வெற்றிகரமாக ஏற்பாடு செய்த Youth Alliance Sri Lanka (YASL) ,Youth Unity Power (YUP), National Youth Services Council அமைப்புக்களை வெகுவாக இளைஞர்கள் பாராட்டினார்கள்.







0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top