ஏ.ஆர். மன்சூரின் மறைவு இந்நாட்டிற்கும், சமூகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்

சாய்ந்தமருது ஷூறாஹ் சபை தெரிவிப்பு

முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூரின் மறைவு இந்நாட்டிற்கும், சமூகத்திற்கும் ஒரு ஈடுசெய்ய முடியா இழப்பாகுமெனவும், அவரிடமிருந்து எடுக்கவேண்டிய அரசியல் அனுபவங்களையும், படிப்பினைகளையும் நாம் பெற்றுக்கொள்ளத் தவறிவிட்டோம் என சாய்ந்தமருது ஷூறாஹ் சபை விடுத்துள்ள அறிக்கையில்குறிப் பிட்டுள்ளது.

ஒரு சமூகத்திற்கான அரசியல் நிகழ்ச்சி நிரலை தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைந்து எவ்வாறு முன்நோக்கி எடுத்துசெலலாம் என்பதை தனது அரசியல் மூலம் முழு நாடிற்கும் செயற்படுத்திக் காட்டிய ஒரு புத்திஜீவுத்துவ அரசியல் வாதியாகும்.

ஒரு சமூகத்தின் வாக்குகளைப் பெறுவதற்கு இனவாத, பிரதேசவாத அரசியல் அவசியமில்லை என்பதை எடுத்துக்காட்டி தமிழ் மாவட்டங்களில் மட்டுமல்ல, கல்முனைத் தொகுதியிலும் தனது சேவையை முன்னெடுத்து முஸ்லிம்கள் தொடர்பான நல்லபிப்பிராயத்தை ஏனைய சமூகங்கள் மத்தியில் பதியவைத்தவராகும்.

இவரது காலத்தில் சாய்ந்தமாருதில் முன்னெடுக்கப்பட்ட கல்வி அபிவிருத்தி, வைத்தியாசாலை போன்ற பணிகளை இவ்வூர் மறக்கமுடியாது. அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று குவைத் நாட்டுக்கான தூதுவராக கடமையாற்றியபோது தென்கிழக்குப் பல்கலைக் கழகத்துக்குக் கொண்டுவரப்பட்ட பாரிய நிதி அப்பல்கலைக்கழக வரலாற்றில் மைல்கல்லாகும் எனக்குறிப்பிடலாம்.

அவரது அரசியல் ஆளுமையும், உபாயங்களும் எமது சமகால அரசியலுக்கு ஒரு வழிகாட்டி என்பதுடன், புரட்டிப் பார்க்கப் படவேண்டியதுமாகும்

அன்னாரின் மறைவால் கவலையுறும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வதோடு எல்லாம் வல்ல இறைவன் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலானசுவனபதியை வழங்குவானாக.

எனவே அவரின் மறுமை நல்வாழ்விற்காக சாய்ந்தமருது மக்கள் எல்லாம் வல்ல இரவைனிடம் பிரார்த்தனை செய்யுமாறு வேண்டுகின்றோம்

எம். ஐ. எம். சாதாத்

செயலாளர்

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top