நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் ஏப்ரல் 04 இல்
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்
பிரதமர்
ரணில் விக்கிரமசிங்கவுக்கு
எதிரான நம்பிக்கையில்லா
தீர்மான விவாதம்
எதிர்வரும் ஏப்ரல் 04 ஆம் திகதி எடுத்துக்
கொள்ள முடிவு
செய்யப்பட்டுள்ளது.
இன்று
(22) பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற கட்சித்
தலைவர்கள் கூட்டத்தில்
குறித்த தீர்மானம்
எடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர்
ரணில் விக்கிரமசிங்கவுக்கு
எதிராக நம்பிக்கையில்லா
தீர்மானமொன்றை நேற்றையதினம் (21) ஒன்றிணைந்த
எதிர்க்கட்சியினர் சமர்ப்பித்திருந்தனர்.
ஒன்றிணைந்த
எதிர்க்கட்சியைச் சேர்ந்த 51 எம்.பி.க்கள்
உள்ளிட்ட 55 பாராளுமன்ற உறுப்பினர்களின்
கையெழுத்துடன் குறித்த தீர்மானம் சபாநாயகர் கரு
ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டது.
டி.பீ ஏக்கநாயக்க,
நிஷாந்த முத்துஹெட்டிகம,
சுசந்த புஞ்சிநிலமே,
காதர் மஸ்தான்
ஆகிய நான்கு
சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும்
இப்பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment