பணவீக்கம் 3.2 சதவீதமாக வீழ்ச்சி
தொகை மதிப்பீட்டு மற்றும்
புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவிப்பு
கடந்த
பெப்ரவரி மாதம்
பணவீக்கம் வீழ்ச்சி
கண்டிருந்ததாக தொகை மதிப்பீட்டு மற்றும் புள்ளிவிபரவியல்
திணைக்களம் அறிவித்துள்ளது.
திணைக்களத்தின்
பணிப்பாளர் நாயகம் கலாநிதி அமர சத்தரசிங்ஹ
தேசிய நுகர்வோர்
விலைச்சுட்டெண்ணை வெளியிட்டு பணவீக்கம் பற்றிய விபரங்களை
அறிவித்துள்ளார்.
இதன்
பிரகாரம், ஜனவரியில்
5.4 சதவீதமாக இருந்த பணவீக்கம் பெப்ரவரியில் 3.2 சதவீதமாக குறைவடைந்துள்ளது.
உணவுப்
பொருட்களின் விலை மட்டம் வீழ்ச்சி கண்டமையே
பணவீக்கம் குறைவடைந்தமைக்கு
பிரதான காரணம்
என்று திணைக்களம்
வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மரக்கறி,
மிளகாய், சின்னவெங்காயம்,
அரிசி, மீன்,
உருளைக்கிழங்கு, சீனி முதலான பொருட்களின் விலை
மட்டங்கள் குறைந்துள்ளன.
எனினும், தேங்காய்,
கோழி இறைச்சி
போன்றவற்றின் விலைகள் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment