சசிகலாவின் கணவர் நடராஜனின் உடல் அடக்கம்
தீவிர
உடல் நலக்
குறைவால் உயிரிழந்த
சசிகலாவின் கணவர் ம.நடராஜனின் உடல்,
அவரது சொந்த
ஊரான விளார்
கிராமத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால்
நினைவு முற்றத்தின்
எதிரே நேற்று
இரவு அடக்கம்
செய்யப்பட்டது.
கடந்த
அக்டோபர் மாதம்
சென்னை தனியார்
மருத்துவமனையில் சிறுநீரகம், கல்லீரல் மாற்று அறுவைச்
சிகிச்சை செய்துகொண்ட
நடராஜன், அண்மையில்
ஏற்பட்ட தீவிர
நெஞ்சக தொற்றுக்காக
அதே மருத்துவமனையில்
சிகிச்சையில் இருந்தபோது, நேற்று முன்தினம் மரணமடைந்தார்.
இதையடுத்து, தஞ்சாவூர் பரிசுத்தம் நகரில் உள்ள
அவரது வீட்டுக்கு
நேற்று முன்தினம்
இரவு கொண்டு
வரப்பட்ட உடலுக்கு,
ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலை
4 மணியளவில் குடும்பத்தினர் சடங்குகளை மேற்கொண்டனர்.
பின்னர்,
மாலை சுமார்
4.15 மணியளவில் நடராஜனின் உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைக்கப்பட்டு இறுதி ஊர்வலம்
புறப்பட்டது. சுமார் 5 கி.மீ. தொலைவில்
உள்ள விளார்
கிராமத்தின் நுழைவு எல்லையில் உள்ள முள்ளிவாய்க்கால்
நினைவு முற்றத்தை
மாலை 6.45 மணிக்கு
சென்றடைந்தது. முற்றத்தில் உள்ள முத்தமிழ் மண்டபத்தில்
உடலை வைத்து
மரியாதை செலுத்தப்பட்டு,
பின்னர் முற்றத்தின்
எதிரே உள்ள
நடராஜனுக்கு சொந்தமான இடத்தில் இரவு 7.15 மணியளவில்
அடக்கம் செய்யப்பட்டது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.