கண்டி மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம்
நாளை காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும்
சிங்கள,
முஸ்லிம் இனங்களுக்கிடையில்
தோன்றியுள்ள பதற்ற நிலையைத் தொடர்ந்து கண்டி
மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்
உடனடியாக நடைமுறைக்குக்
கொண்டு வரப்பட்டுள்ளதாக
பொலிஸ் ஊடகப்
பேச்சாளர் அலுவலகம்
அறிவித்துள்ளது.
தெல்தெனியவில்
கடந்தவாரம் மோதல் ஒன்றின் போது படுகாயமடைந்த
சிங்களவர் ஒருவர்
கடந்த சனிக்கிழமை
மரணமானார்.
இதையடுத்து,
நேற்று தெல்தெனிய
பகுதியில் பதற்ற
நிலை ஏற்பட்டதை
அடுத்து அங்கு சட்ட ஒழுங்கை
பாதுகாப்பதற்காக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் (STF) கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
எனினும்,
தெல்தெனியவில் முஸ்லிம்களுக்கு சொந்தமான வாணிப நிலையங்கல் மீது நேற்றிரவு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
சில கடைகள்
தீக்கிரையாக்கப்பட்டன. சில வாகனங்களும்
தாக்கப்பட்டன.
இந்தச்
சம்பவங்கள் தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், அங்கு
இன்று பதற்றநிலை
அதிகரித்தது.
இன்று
கண்டி- திகண
பகுதியில் இரண்டு
இனங்களையும் சேர்ந்த குழுக்களுக்கிடையில்
மோதல்கள் வெடித்தன.
மோதலில் ஈடுபட்டவர்களைக்
கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகளையும்
வீசினர்.
அதேவேளை,
தெல்தெனியவிலும் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதும் கண்ணீர்
புகைக்குண்டு வீச்சு நீர்ப் பீரங்கித்
தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனால்
கண்டி மாவட்டத்தில்
ஏற்பட்டுள்ள பதற்றநிலையைக் கருத்தில் கொண்டு மாவட்டம்
முழுவதும் உடனடியாக
ஊரடங்குச் சட்டம்
நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
நாளை
காலை 6 மணி
வரை ஊரடங்குச்
சட்டம் நடைமுறையில்
இருக்கும் என்றும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
Govt. statement on Digana incidents
Stateued by the Department of
Government Information, Sri Lanka with regard to the violent incidents in
Digana, Kandy.
A police curfew was
imposed in the Kandy District until Tuesday 6th March morning. The Police put
on alert to ensure that the enforcement of the law proceeds without hindrance
and the situation does not spiral into an inter-communal conflagration.
The Government
appeals to all parties and especially the general public to act with responsibility
and remain calm. The suspects have been arrested and the law will take its
course.
Sudarshana
Gunawardena,
Director General of
Government Information,
Department of Government
Information,
05th March 2018
0 comments:
Post a Comment