கல்வியியற்கல்லூரி – நேர்முகப்பரீட்சைக்கான
கடிதங்கள் கிடைக்காதவர்கள் தொடர்பு கொள்ளவும்
கல்வியியற்
கல்லூரிகளுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான
நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
2015ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர
உயர்தரப்பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில்
2017ஆம் ஆண்டின்
கல்வி நடவடிக்கைகளுக்காகவே
மாணவர்கள் கல்வியில்
கல்லூரிக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.
வர்த்தமானி
அறிவித்தலுக்கு அமைவாக மாவட்ட அடிப்படையில் இம்முறை
மூன்று மடங்கு
மாணவர்கள் நேர்முகப்பரீட்சைக்கு
அழைக்கப்படவுள்ளனர்.
நாடு
முழுவதிலுமுள்ள 19 கல்வியில் கல்லூரிகளுக்கு
27 கற்கைநெறிகளுக்காக 4ஆயிரத்து 745 பேர்
சேர்த்துக்கொள்ளப்படவுள்ளதாக கல்வியற் கல்லூரி
தலைமை ஆணையாளர்
கே.எம்.எச்.பண்டார
தெரிவித்துள்ளார். நேர்முகப்பரீட்சை கல்விபீடங்களின் மாவட்ட மட்டத்தில் நடைபெறவுள்ளன.
இம்மாதம்
முடிவடைய முன்னர்
கல்வியல் கல்லூரிகளுக்கு
மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளதாக
ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
நேர்முகப்பரீட்சைக்காக
இதுவரையில் கடிதங்கள் கிடைக்கப்பெறாதோர்
011 2784818 மற்றும் 0112 784816 என்ற தொலைபேசி
இலங்கங்களுடன் தொடர்புகொண்டு அது தொடர்பான விபரங்களை
கேட்டறிந்துகொள்ளமுடியும்.
இவர்களின்
தகுதிக்கு அமைவாக
தேசிய கல்வியற்
கல்லூரியில் நேர்முகப்பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளன.
0 comments:
Post a Comment