தலைவர் அஷ்ரஃப் அவர்களின் மரண விசாரணை

ஆணைக் குழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளதாக
பசீர் சேகுதாவூத் தெரிவிப்பு





முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப்பினுடைய மரணம் தொடர்பிலான விசாரணை ஆணைக் குழுவின் அறிக்கை, நேற்று வெள்ளிக்கிழமை தனக்கு கிடைக்கப்பெற்றதாக ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், குறித்த அறிக்கையினை வழங்குமாறு பசீர் சேகுதாவூத் விண்ணப்பித்திருந்தமைக்கு அமைவாக, நேற்று வெள்ளிக்கிழமை அந்த அறிக்கை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வறிக்கை, ஜனாதிபதி செயலகத்தில் இருந்து ஜனாதிபதியின் மேலதிக செயலாளர்W.J. S கருணாரத்னவினால் உறுதிப்படுத்தப்பட்டு தகவலறியும் ஆணைக் குழுவுக்கு கடந்த 27 ஆம் திகதி ஒப்படைக்கப்பட்டது. இவ்வறிக்கை ஜனாதிபதி செயலகத்திலோ அல்லது சுவடிகள் கூடத்திணைக்கணத்திலோ காணப்பட்டிருக்கவில்லை. அது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து ஜனாதிபதி செயலகத்தினால் கேட்டுப் பெறப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டு முத்திரையிடப்பட்டுள்ளது. இவ்வறிக்கையின் ஒவ்வொரு பக்கத்திலும் தகவலறியும் ஆணைக்குழுவின் முத்திரை பதிக்கப்பட்டு எமக்கு வழங்கப்பட்டுள்ளது.
27 ஆம் திகதியன்று நடந்த ஆணைக்குழுவின் அமர்விலே சுவடிகள்கூடத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் இவ்வறிக்கையை அவர்களது உத்தியோகபூர்வ இணயத்தில் வெளியிடுமாறு ஆணையகத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை, இவ்வறிக்கை எமது திணைக்களத்திடமிருந்து பெறப்பட்டதில்லை எனவே எமது இணையத்தில் வெளியிட முடியாது என்று கூறி பணிப்பாளர் வேண்டுகோளை நிராகரித்தார்.

வெளியிடுவதாக இருந்தால் CID இன் இணையத்தில் அல்லது ஜனாதிபதி செயலகத்தின் இணையத்தில் வெளிடப்படல் வேண்டும் என்பதே நியாயமாகும். எப்படி வெளியிடப்படுகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடமிருந்து பெற்ற அறிக்கை முன்னர், புலனாய்வாளர்களுக்கு ஏன் அனுப்பப்பட்டது என்கிற நியாயமான கேள்வியுடன் எமது சட்டத்தரணிகள் குழாமிடம் இவ்வறிக்கையை ஆராயுமாறு கோரி ஒப்படைக்வுள்ளேன். அவர்களது ஆலோசனைக்கமைய அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளேன் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top