“நாடுபூராகவும் உள்ள பட்டதாரிகளின்
விண்ணப்பங்களைப் பரிசீலித்து மிகவிரைவில்
நியமனங்களை வழங்குவதற்கான
நடவடிக்கையை எடுப்போம்.
மட்டக்களப்பில் ஜனாதிபதி உறுதி
“வேலையற்ற பட்டதாரிகள் அனைவருக்கும் விரைவில் நியமனம் வழங்கப்படும்” என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 313 வேலையற்றபட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனமும் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளுக்கான நடமாடும் விஞ்ஞான ஆய்வு உபகரணங்களும் வழங்கி வைக்கும் நிகழ்வும், மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இன்று (03) நடைபெற்ற போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
“வேலையில்லாத பட்டதாரிகளின் பிரச்சினை கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல நாடுபூராகவும் இருக்கின்றது. இதற்காக ஏழு மாதங்களுக்கு முன்பு பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பத்தைக் கோரியிருந்தோம். நாங்கள் விண்ணப்பங்களைக் கோரினாலும் தேர்தல் இடம்பெற்றமையால் அவர்களுக்கான நேர்முகப்பரீட்சையை நடத்த முடியவில்லை.
“நாடுபூராகவும் உள்ள பட்டதாரிகளின் விண்ணப்பங்களைப் பரிசீலித்து மிகவிரைவிலே நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கையை எடுப்போம். இந்நியமனங்களுக்கு மேலாகத்தான் மாகாண சபையால் ஆசிரியர் நியமனங்கள் போன்ற நியமனங்கள் வழங்கப்படுகின்றன.
“மாகாண சபையால் இவ்வாறு நியமனங்கள் வழங்கப்படுகின்ற அதேவேளை, நாடுபூராகவும் உள்ள பட்டதாரிகள் அனைவருக்கும் ஆறுமாத காலத்துக்குள் நியமனம் வழங்குவோம்.
“மட்டக்களப்பைச் சேர்ந்த வேலையில்லாத பட்டதாரிகள் சங்கத்தினர் எமக்கு கடிதமொன்றை வழங்கியிருந்தனர். அதில் கிழக்கு மாகாணத்திலே உள்ள பொதுச்சேவை ஆணைக்குழுவோடு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
“பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கு அதிகாரமில்லாத விடயங்களை பட்டதாரிகளிடம், அவர்கள் கூறியிருக்கின்றனர் இதுமிகவும் தவறானவிடயமாகும். ஆணைக்குழுவுக்கு அவ்வாறானதொரு எந்த அதிகாரமும் இல்லை. இவ்வாறான பொதுச்சேவை ஆணைக்குழுவை கலைத்துவிடுமாறு ஆளுநருக்கு கூறுகின்றேன்.
“குறித்த ஆணைக்குழுவிலே 14வருடங்களாக பணியாற்றுகின்றவர்களும் இருப்பதாக அறிகின்றேன். இதுதொடர்பில் ஆளுநருக்கும் ஆலோசனை வழங்கியுள்ளேன்.
“கிழக்கு மாகாணத்தின் ஊடாக நியமனங்கள் வழங்கும்போது நிதிப்பற்றாக்குறைகள் ஏற்படுமாயின் அந்நிதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன்.
“பட்டதாரிகள் என்பவர்கள் நாட்டினது சொத்துக்கள். நாட்டின் எதிர்காலத்துக்கு அவர்களது அறிவுமிக மிக அவசியம். அவர்களுக்கு வேலை வழங்கவேண்டியது அரசாங்கம் செய்யவேண்டிய காரியம்.
“எமது கல்வி முறையிலே இருக்ககூடிய தவறுகள் காரணமாக பட்டதாரிகள் எதிர்ப்பு, ஆர்ப்பாட்டங்களிலே ஈடுபடுகின்றனர். அது பட்டதாரிகளின் தவறல்ல. கல்விமுறையிலேதான் தவறிருக்கின்றது. இதற்காக கல்வி முறையை மாற்றியமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
“மட்டக்களப்பு மாவட்டத்தில் பல அபிவிருத்தி வேலைகள் இடையில் நிறுத்தப்பட்டுள்ளதாக இங்குள்ள அரசியல்வாதிகளால் கூறப்பட்டது. அவ்வாறான, பாதை அபிவிருத்தி வேலைகள், அங்கிகரிக்கப்பட்ட வேலைகள் ஏன்? இடையிலே நிறுத்தப்பட்டுள்ளன என்பதனை உடனடியாக ஆராய்வேன். அவ்விடயங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன்.
“வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி செயலணியொன்றினை உருவாக்க உள்ளேன்.
“இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தவதற்காக முயற்சித்து வருகின்றோம்.
“மார்ச் அல்லது செப்டெம்பர் மாதமாகின்ற போது, இந்த நாட்டில் மக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்துகின்ற சில நடவடிக்கையை கடும் போக்குவாதிகளும் தீவிரவாதிகளும் மேற்கொள்கின்றனர். இந்த நாட்டை சீரழிப்பதற்கு திட்டமிட்டு இவர்கள் செய்கின்றனர். இதில் மக்கள் கவனமாக பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும்” என்றார்.
இருநூறு பட்டதாரிகளுக்கும் 40 டிப்ளோமா பட்டங்களைப்பெ ற்றுக்கொண்டவர்களுக்கும் இதன்போது ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. 21 பேருக்கான நியமனங்களை ஜனாதிபதி வழங்கிவைத்தார்.
கிழக்கு மாகாண பாடசாலைகளில் விஞ்ஞான ஆய்வுகூடங்களுக்கு தேவையானஉபகரணங்களை பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 3பாடசாலைகளுக்கான உபகரணங்களை ஜனாதிபதி வழங்கிவைத்தார்.
கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம, இராஜாங்க அமைச்சர்களானஎம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, சிறியாணி விஜேவிக்கிரம, பிரதி அமைச்சர் அமீர்அலி. பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா, கிழக்கு மாகாணசபையின்தவிசாளர் சந்திரதாச கலப்பத்தி, தலைமைச் செயலாளர் சரத் அபேகுணவர்தன, பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்
0 comments:
Post a Comment