அல்ஜீரியாவில் ராணுவ விமானம் விபத்து
257 பேர் பலி என தகவல்

   
வட மேற்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 257 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அல்ஜீரிய தலைநகர் அல்ஜியர்ஸிற்கு அடுத்துள்ள பௌபரிக் இராணுவ விமான தளம் அருகே குறித்த இராணுவ விமானம் விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு பகுதியில் உள்ள பெசார் என்ற நகரத்தை நோக்கி சென்று கொண்டிருந்த விமானமானது நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது திடீரென கீழே நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது.
லயுஷின் இல் 76 என்ற பெயர் கொண்ட ரஷ்ய தயாரிப்பு விமானமான இதில் ராணுவ வீரர்கள் தவிர பயணிகளும் இருந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 257  பேர் பலியானதாக அந்நாட்டு ரேடியோ அறிவித்துள்ளது.









0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top