66 வருடங்களாக விரல் நகத்தை வெட்டாத முதியவர்
 இடது கை நிரந்தர ஊனமடைந்தது
   
விரல் நகங்களை 66 வருடங்களாக வெட்டாமல் இருந்த இந்தியரின் இடது கை நிரந்தர ஊனமடைந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரை சேர்ந்தவர் சிறிதர் சில்லால். தற்போது 88 வயதாகும் சிறிதர் சில்லால், கடந்த 1952-ம் ஆண்டுமுதல் தனது இடது கையில் நகத்தை வெட்டாமல், நீளமாக வளர்க்க ஆரம்பித்தார்.
இதன் விளைவாக கடந்த 66 ஆண்டுகளில் அவரது இடது கையில் உள்ள ஐந்து விரல்களிலும் வளர்ச்சி அடைந்துள்ள நகங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி தற்போது 909.6 செண்டிமீட்டர்களாக உள்ளது. இதில் அவரது இடது கை கட்டை விரலில் உள்ள நகத்தின் வளர்ச்சி மட்டும் 197.8 செண்டிமீட்டர் ஆகும்.
உலகிலேயே ஒரு கையில் மிக நீளமான நகத்தை கொண்டவர் என்ற முறையில் கடந்த 2016-ம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் சிறிதர் சில்லால் இடம்பிடித்தார்.
இந்நிலையில் தனது விரல் நகத்தினை வெட்டுவதற்கு முன்வந்த அவரை ரிப்ளீஸ் பிலீவ் இட் ஆர் நாட் மியூசியம் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு அழைத்து சென்றது.
டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள இந்த மியூசியத்தில் சிறிதர் சில்லாலின் நகங்களை வெட்டும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த விரல் நகங்கள், ஒரு 3 அடுக்கு கட்டிடத்தின் உயரமுடன் மொத்தம் 31 அடி நீளம் கொண்டுள்ளன என ரிப்ளீஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சிறிதர் சில்லால், தொடர்ந்து 66 வருடங்களாக நகங்களை வெட்டாமல் வளர்த்து வந்த நிலையில், அவை வளர வளர எடை கூடி அவரின் இடது கை நிரந்தர ஊனமடைந்தது.  மூடிய நிலையில் இருந்து தனது கையை திறக்கவோ அல்லது விரல்களை வளைக்கவோ அவரால் முடியாது என தெரிவித்துள்ளது.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top