இலங்கை – ஈரான் வர்த்தக நடவடிக்கைகள்
80 இலட்சம் அமெரிக்க டொலர்களால் அதிகரிப்பு
அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் தெரிவிப்பு
இலங்கை
மற்றும் ஈரான்
நாடுகளுக்கிடையில் வர்த்தக நடவடிக்கைகளை
2016 ஆம் ஆண்டுடன்
ஒப்பிடுகையில் கடந்த வருடத்தில்; 80 இலட்சம் அமெரிக்க
டொலர்களினால் அதிகரித்துள்ளதாக கைத்தொழில்
மற்றும் வர்த்தக
அமைச்சர் ரிஷாத்
பதியுத்தீன் தெரிவித்துள்ளார்.
கடந்த
வருடத்தில் இரு நாடுகளுக்கிடையில் இடம்பெற்ற வர்த்தக
நடவடிக்கைகளின் பெறுமதி 18 கோடியே 80 இலட்சம் அமெரிக்க
டொலர்களென மதிப்பீடு
செய்யப்பட்டுள்ளது.
இரு
நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தில் 94 சதவீதம் இலங்கையில் இருந்து மேற்கொள்ளப்பட்ட
ஏற்றுமதி பொருட்களுக்கான
பெறுமதியாகும். இதில் 90 சதவீதம் தேயிலை ஏற்றுமதியாகும்
என்றும் அமைச்சர்
மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment