காலத்திற்கு காலம் மில்லியன் கணக்கில்
நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறி
கல்முனைப் பிரதேசத்தில் அடிக்கல் விழாக்களை நடத்தி
காலம் கடத்தும் அரசியல்வாதிகள்!
திறப்பு விழாக்களைக் காணோம்! என மக்கள் தெரிவிப்பு
காலத்திற்கு
காலம் மில்லியன்
கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறி கல்முனைப் பிரதேசத்தில் அடிக்கல் விழாக்களை
நடத்தி மக்களை ஏமாற்றி காலத்தைக் கடத்திவிட்டதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்
கல்முனைப்
பிரதேசத்தில் கடந்த பல வருடங்களாகக் குறிப்பிட்டுச்
சொல்லக்கூடிய எந்தவொரு பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தையும்
தற்போதய அதிகாரமிக்க அரசியல்வாதிகள்
எவரும் செய்வதாக
இல்லை எனவும் இப்பிரதேச மக்களால் கவலை தெரிவிக்கப்படுகின்றது.
கல்முனை புதிய நகர அபிவிருத்தித் திட்டம் எனக்கூறி
500 மில்லியன் ரூபாவை நான்கு மாடங்களுக்குள் செலவிடப்போவதாக அறிவிக்கப்பட்டது.
அந்தக் கதைகூட காற்றில் கரைந்துவிட்டதாக மக்களால் நகைப்புடன்
தெரிவிக்கப்பட்டுவருகின்றது.
இது மாத்திரமல்லாமல், கல்முனை மற்றும் சம்மாந்துறை பிரதேசங்களை
அபிவிருத்தி செய்வது தொடர்பான திட்டமிடலை மேற்கொள்வதற்காக
நகர திட்டமிடல்
அமைச்சுக்கு 2017ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தில்
200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த வருடம்
அறிவிக்கப்பட்டது. இதனை பயன்படுத்தி கல்முனை
மற்றும் சம்மாந்துறை
ஒருங்கிணைந்த பெருநகர அபிவிருத்தி தொடர்பான கருத்திட்டங்களை
மேல் மாகாண
மற்றும் நகர
அபிவிருத்தி அமைச்சிடம் ஒப்படைப்பதற்கு இக்கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கல்முனை
மற்றும் சம்மாந்துறை
பாரிய ஒருங்கிணைந்த
அபிவிருத்தி திட்டத்துக்குள் உள்ளடங்கும்
முக்கியமான அணைக்கட்டு பாதையை செப்பனிட்டு நிர்மாணிப்பதற்கு
தீர்மானிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. அத்துடன்
வீதி அபிவிருத்தி
அதிகாரசபையினால் ஏற்கனவே அங்கீகாரமளிக்கப்பட்ட
மாவடிப்பள்ளி - துறைநீலாவணை வரையான வீதியை அமைப்பதற்கும்
தீர்மானிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. போக்குவரத்து
நெரிசலை குறைக்கும்
வகையில் ஒரு
வழிப்பாதையாக அமைக்கப்படும் இவ்வீதி கரைவாகு வட்டை,
இறைவெளி கண்டம்
ஊடாக நற்பிட்டிமுனை
தமிழ் பகுதியை
ஊடறுத்து துரைவேந்திர
மேடு ஊடாக
பெரிய நீலாவணையை
வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அபிவிருத்தி
திட்டம் உள்ளடங்கும்
பிரதேசத்தில் புகையிர பாதை அமைக்கப்படும் பட்சத்தில்,
அதனையும் கருத்திற்கொண்டு
அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது கல்முனை பொதுச் சந்தை அபிவிருத்திக்கு முதல் கட்டமாக 50 மில்லியன் ரூபா என பெரிதாகப் பறைசாத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.
இவ்வாறுதான் கல்முனைப்
பிரதேச மக்கள் பல மில்லியன் கணக்கில் அபிவிருத்தி எனக்கூறி கடந்த பல வருடங்களாக ஏமாற்றப்பட்டுவருகின்றார்கள்.
இது மாத்திரமல்லாமல் தேசிய ரீதியில் மின்னொளியில் விளையாடக்கூடிய வசதியுள்ள பல விளையாட்டு மைதானங்கள் இருக்கின்ற போதிலும் கல்முனையில் அவ்வாறான வசதியுள்ள மைதானங்கள் கல்முனையில் இல்லாதது மிகுந்தகுறையாகும். இதனை நிவர்த்திக்கும் பொருட்டு இன்னும் ஒரு வருடத்துக்குள் கல்முனையில் பொருத்தமான ஒரு விளையாட்டு மைதானத்துக்கு மின்னொளியில் விளையாடக்கூடிய வசதிகள் செய்துதரப்படும் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கடந்த 2017-07-09 ஆம் திகதி
கல்முனையிலுள்ள விளையாட்டு வீரர்களுக்கு வாக்குறுதி ஒன்றை வழங்கினார். அந்த வாக்குறுதிகூட நிறைவேற்றப்படவில்லை..
கல்முனைப் பிரதேசத்தில் அபிவிருத்தி என்ற பேரில் பண ஒதுக்கீடுகள்
மில்லியன் கணக்கில் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு அடிக்கல் நடும்
விழாக்கள், அங்குரார்ப்பன நிகழ்வுகள் என்பன மிகக்
கோலாகலமாக ஏற்பாடுகள்
செய்யப்படுகின்றனவே தவிர திட்டங்கள்
பூர்த்தி செய்யப்பட்டு
மக்களிடம் கையளிக்கப்படுவதாகவும் இல்லை வாக்குறுதிகள்
நிறைவேற்றப்படுவதாவும் இல்லை எனவும் மக்கள் கூறுகின்றனர்.
அடிக்கல்
நடும் விழாக்கள்,
அங்குரார்ப்பன வைபவங்கள் என்றால் கல்முனை
மற்றும் மருதமுனை
பிரதான பாதைகள்
பல்லாயிரக்கணக்கான ரூபா செலவிடப்பட்டு
பச்சை,மஞ்சல்
நிறப் பொலித்தீன்களாலும் பல நிற பல்புகளாலும்
அலங்கரிக்கப்படுகின்றன.
இறுதியில்
பொது மேடை
ஒன்று போடப்பட்டு
கட்சியிலுள்ள முக்கியஸ்த்தர்கள் தொடக்கம்
தலைவர் வரை
நள்ளிரவையும் தாண்டி தமது பக்க நியாயங்களையும்
தாங்கள் பொறுமை
காத்திருப்பதையும் நாம் சரியான
பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறோம் சரியான நேரத்தில்
சரியான முடிவை
எடுப்போம் என்று கூறுகின்றனர்.
தேர்தல் காலம் என்றால் அரசாங்கத்திற்கு அஞ்சுபவர்கள்
நாங்கள் அல்ல, மாவட்டத்தின் சாரதியும் நாங்கள்தான் நடத்துனர்களும் நாங்கள்தான், எங்களுக்கு வாக்களியுங்கள் நாங்கள்தான் யானைப் பாகனாகச்
செயல்படுவோம் எனவும் கூறுகின்றனர்.
கூட்ட
ஆரம்பத்தில் ஆயிரம் விளக்குடன் ஆதவன் எழுந்து வந்தான்,
காக்கா வெண்டி, காக்கா வெண்டி
என்ற பாடல்கள்
கம்பிரமாகப் பாடப்படுகின்றது, கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்
போது இசை
முரசு ஈ.எம் ஹனிபாவின்
பாடல்களும் இடையிடையே இசைக்க வைக்கப்பட்டு மக்களுக்கு
தமது கருத்துக்களைக்
கூறிவிட்டுச் சென்று விடுகின்றனர். கூட்டம் ஒன்றை
நடாத்துவதற்காகவே அடிக்கடி ஏதாவது ஒன்றுக்கு அடிக்கல்
நடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பெரு
விழாக்கள் ஏற்பாடுகள்
செய்து அடிக்கல்
நட்ட வேலைத்
திட்டங்கள், அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்ட செயல்பாடுகள்
தொடர்ந்து இப்பிரதேசத்தில்
இடம்பெறுகின்றது. ஆனால், அவைகள் சரியாகப் பூர்த்தியாக்கப்பட்டு
மக்களுக்காகக் கையளிக்கப்படுகின்றதா என்பதுதான்
கேள்விக் குறி
என்று இங்குள்ள
மக்களால் கூறப்படுகின்றது.
0 comments:
Post a Comment