அலுகோசு பதவிக்கு அடுத்த வாரம் விண்ணப்பம் கோரல்



மரணதண்டனை நிறைவேற்றும் நிசாரணன் (அலுகோசு) 'தூக்கிலிடும்' பதவிக்கு ஆட்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
இது தொடர்பாக பத்திரிகை அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் குற்றம் தொடர்பில் நீதிமன்றத்தினால் மரணதண்டனை பெற்று சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் பட்டியல் நீதியமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். பெண் ஒருவர் அடங்கலாக 19 பேரின் பெயர்கள் இதில் இடம்பெற்றிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்
நீதிமன்றத்தின் ஆலோசனைக்கு அமைய இந்த பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தண்டனையை நிறைவேற்ற தேவையானநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
மரணதண்டனை நிறைவேற்றும் அலுகோசு 'தூக்கிலிடும்' பதவிக்கு ஆட்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இது தொடர்பாக பத்திரிகை அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்படும்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்திருப்பதுடன் குறிப்பிட்ட தகுதியைப் பூர்த்தி செய்தவர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும். போதைப்பொருள் தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்டு சிறைச்சாலையில் உள்ள கைதிகள் மீண்டும் இவ்வாறான நடவடிக்கைகளில் தொடர்புபட்டதான குற்றச்சாட்டு கிடைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனாலேயே மரண தண்டனை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டது.
மஹாசங்கத்தினர் உள்ளிட்ட அனைத்து மதத் தலைவர்களும் இதற்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். புத்திசாலிமிக்க பொதுமக்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நாட்டிலிருள்ள போதைப்பொருளை இல்லாதொழிப்பதன் தேவையை சுட்டிக்காட்டியுள்ள இவர்கள், எதிர்கால பரம்பரையின் நலனுக்கான வேலைத்திட்டத்தின் தேவை வலியுறுத்தப்பட்டுள்ளதுமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top