லண்டனில் ஜனாதிபதி ட்ரம்புக்கு எதிராக
பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம்
பலூன்களை பறக்கவிட்டு கிண்டல்
இங்கிலாந்து
சென்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து
லண்டனில் பல்லாயிரக்கணக்கானோர்
திரண்டு ஆர்பாட்டத்தில்
ஈடுபட்டனர். ‘ட்ரம்பே திரும்பி போ’ என்ற
முழக்கத்துடன், அவரை கிண்டல் செய்து பலூன்களை
பறக்கவிட்டும் அவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
அமெரிக்க
ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்ற
பிறகு, அகதிகளுக்கு
தடை, வெளிநாட்டினருக்கு
விசா அளிப்பதில்
கட்டுப்பாடு, வெளிநாட்டு பொருட்கள் இறக்குமதி மீது
கூடுதல் வரி,
விதிப்பு உள்ளிட்ட
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவரது இந்த
நடவடிக்கைக்கு அமெரிக்கா மட்டுமின்றி மற்ற நாடுகளிலும்
எதிர்ப்பு நிலவி
வருகிறது.
இந்நிலையில்
ட்ரம்ப், அவரது
மனைவி மெலினா
ஆகியோர் இங்கிலாந்தில்
சுற்றுப் பயணம்
மேற்கொண்டுள்ளனர். இங்கிலாந்து பிரதமர்
தெரஸா மே,
ராணி எலிபெத்
உள்ளிட்டோரை ட்ரம்ப் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ட்ரம்ப் வருகைக்கு
எதிர்ப்பு தெரிவித்து,
‘ட்ரம்ப் திரும்பி
போ’ என்ற
கோஷத்துடன் லண்டனில் பேரணிகள் நடந்து வருகின்றன.
சமூக
வலைத்தளங்களிலும் எதிர்ப்பு பிரசாரங்கள் நடந்து வருகின்றன.
லண்டன் மையப்பகுதியில்
உள்ள சதுக்கத்தில்
திரண்ட ஆயிரக்கணக்கானோர்
ட்ரம்புக்கு எதிராக கண்டன பதாகைகளை ஏந்தியும்,
முழக்கமிட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ட்ரம்புக்கு எதிர்ப்பு
தெரிவிக்க பல
பகுதிகளில் இருந்து வந்திருந்த எதிர்ப்பாளர்கள் தொடர்
போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ட்ரம்ப்பை கிண்டல்
செய்து அவர்கள்
பலூன்களையும் பரக்கவிட்டனர். ட்ரம்ப் பேபி பலூன்
ஒன்றை போராட்டக்காரர்கள்
பறக்க விட்டனர்.
அப்போது அங்கு
கூடியிருந்த ஆயிரக்கணக்கானோர் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம்
செய்தனர்.
இந்த
போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து
அரசு, அமெரிக்காவுக்கு
எதிரான போராட்டமாக
இதை பார்க்கத்
தேவையில்லை, ஜனாதிபதி ட்ரம்பின் கொள்கைகளுக்கு எதிராக
நடைபெறும் போராட்டமாகவே
பார்க்கிறோம் என தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment