பயணிக்காக தங்கம் கடத்திய பணியாளர்
டெல்லி விமான நிலையத்தில் கைது
துபாயில் இருந்து வந்த பயணிக்காக ரூ. 31 லட்சம் (இந்திய ரூபா) மதிப்புள்ள தங்கம் கடத்திய விமானப் பணியாளருடன் அதை பெற காத்திருந்தவரையும் டெல்லி பொலிஸார் நேற்று கைது செய்தனர்.
வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரும் தங்கத்துக்கு இந்தியாவில் விதிக்கப்படும் சுங்கவரி அதிகமாக உள்ளதால் கள்ளத்தனமாக பல்வேறு வழிகளின் மூலம் தங்கம் கடத்தி வருபவர்களின் என்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்நிலையில், துபாயில் இருந்து இன்று டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய பயணிகளின் உடமைகளை நேற்று சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, சந்தேகப்படும் வகையில் மூன்றாவது வாசல் வழியாக வெளியேற முயன்ற ஒருவரை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கழிப்பறையில் மடக்கிப் பிடித்து சோதனையிட்டனர். தனியார் விமான நிறுவன பணியாளரான அந்நபர் ஒரு கிலோ எடையுள்ள 9 தங்க பிஸ்கட்களை மறைத்து கடத்தி வந்தது இந்த சோதனையில் தெரியவந்தது.
இதையடுத்து, பயணிகள் உதவியாளராக பணியாற்றும் முஹம்மது ஜாவெத் என்னும் அந்நபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில் துபாயில் இருந்து இன்று வந்த விமானத்தில் ஒரு பயணி அந்த தங்க பிஸ்கட்களை தந்து டெல்லி விமான நிலையத்தில் காத்திருக்கும் நபரிடம் ஒப்படைக்குமாறு கூறியதாக தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment