கூட்டுறவுத்துறையின் முன்னேற்றத்திற்காக
விரைவில் முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்
. – ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேன
கூட்டுறவுத்துறையின்
முன்னேற்றத்திற்காக எதிர்வரும் ஒரு
சில மாதங்களில்
பல்வேறு முக்கிய
தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேன
தெரிவித்தார்.
கூட்டுறவுத்துறையின்
நிபுணர்களின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை கருத்திற்கொண்டு
இந்த நிகழ்ச்சித்திட்டத்தை
நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நேற்று
(07) பிற்பகல் மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் இடம்பெற்ற 96வது சர்வதேச கூட்டுறவு
தின தேசிய
நிகழ்வில் கலந்துகொண்டு
உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
கூட்டுறவு
இயக்கத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கு குறித்த
அமைச்சு மற்றும்
தேசிய கூட்டுறவு
சபையுடன் இணைந்து
மிகவும் செயற்திறன்
வாய்ந்த நிகழ்ச்சித்திட்டத்தை
மேற்கொள்ளவுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும்
குறிப்பிட்டார்.
எதிர்வரும்
மாதம் முதல்
தேசிய பொருளாதார
சபையில் தேசிய
கூட்டுறவு சபையையும்
அத்துறையில் உள்ள நிபுணர்களையும் பங்குபற்றச் செய்யவுள்ளதாகவும்
குறிப்பிட்ட ஜனாதிபதி இதன்போது கூட்டுறவு இயக்கத்தை
கட்டியெழுப்புவதற்காக எடுக்க வேண்டிய
தீர்மானங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடுவதாகவும் தெரிவித்தார்.
96வது
சர்வதேச கூட்டுறவு
தினத்தை முன்னிட்டு
தயாரிக்கப்பட்ட நினைவு மலர் மற்றும் கூட்டுறவு
இயக்கம் தொடர்பாக
எழுதப்பட்ட நூலின் தொகுதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
சர்வதேச
கூட்டுறவு தினத்தை
முன்னிட்டு கூட்டுறவு சங்கங்களுக்கிடையில்
இடம்பெற்ற போட்டிகளில்
வெற்றி பெற்றவர்களுக்கான
விருதுகள் மற்றும்
பரிசில்களையும் ஜனாதிபதி வழங்கினார். ஜனாதிபதிக்கும் விசேட
நினைவுப் பரிசொன்று
வழங்க ப்பட்டது.
அமைச்சர்
றிஷாட் பதியுதீன்
இராஜாங்க அமைச்சர்
ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா
பிரதி அமைச்சர்களான
அமீர் அலிஇ
புத்திக பத்திரன
வர்த்தக வாணிபத்துறை
அமைச்சின் செயலாளர்
கே.டி.என்.ரஞ்சித்
அசோக்க, தேசிய கூட்டுறவு
சபையின் தலைவர்
லலித் ஏ.பீரிஸ் மற்றும்
கூட்டுறவுத்துறையில் உள்ள உள்நாட்டு
வெளிநாட்டு அதிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment