அரசாங்கப் பாடசாலைகளுக்கு
28 ஆம் திகதி வரை விடுமுறை
2019 ஆம் அண்டு முதலாம் தவணை
பாடசாலை விடுமுறை
28 ஆம் திகதி
வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக
இரண்டாம் தவணை
பாடசாலை கல்வி
நடவடிக்கைகளுக்காக அனைத்து அரசாங்க
பாடசாலைகளும் இம்மாதம் 29 ஆம் திகதி திறக்கப்படும்
என்று கல்வி
அமைச்சர் அகில
விராஜ் காரியவசம்
தெரிவித்துள்ளார். இது தொடர்பாக
கல்வி அமைச்சின்
ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்
குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே
வேளை நாட்டில்
கல்வியல் கல்லூரிகளில்
மாணவர்கள் தற்பொழுது
விடுதிகளில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதுடன் இவர்களுக்கான பரீட்சை முன்னர் அறிவித்தப்படி
ஏப்ரல் மாதம்
29 ஆம் திகதி
நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு
ஆலோசனைகள் வழங்கப்பட்டிருப்பதாக
கல்வி அமைச்சு
அந்த அறிக்கையில்
மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சகல
அரசாங்கப் பாடசாலைகளிலும்
இரண்டாம் தவணை
கல்வி நடவடிக்கைகளுக்காக
நேற்று 22 ஆம்
திகதி ஆரம்பிக்கப்பட
இருந்தன. உயிர்த்தெழுந்த
ஞாயிறு தினத்தன்று
சில இடங்களில்
நடத்தப்பட்ட தாக்குதல்களை அடுத்து பாடசாலைகளுக்கு இன்று
வரை அதாவது
23 ஆம் திகதி
விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
இரண்டாம்
தவணைக் கல்வி
நடவடிக்கைகளுக்காக இம்மாதம் 29 ஆம்
திகதி மீண்டும்
பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பிலேயே இது குறித்த
தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக
கல்வி அமைச்சர்
அகில விராஜ்
காரியவசம் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment