பொலிஸ் ஊடக பேச்சாளரின்
பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்



பொலிஸாரும் பாதுகாப்பு பிரிவினரும் தற்பொழுது முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு பொதுமக்கள் வழங்கவேண்டும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்ஷகர் ருவான் குணசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.

கொழும்பு பம்பலப்பெட்டி பகுதியில் மர்ம பொதி ஒன்று காணப்படுவதாகவும் இதனால் அங்கு பதற்ற நிலை நிலவுவதாகவும் பாதுகாப்பு பிரிவினருக்கு இன்று தகவல் வழங்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து அந்த பகுதியை விரைந்த பொலிஸார் உள்ளிட்டோர் அதனை பரிசோதித்துள்ளனர்.

அது வெறுமனனே ஒரு கொன்றீட் துண்டு என்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்தே பொலிஸ் ஊடக பேச்சாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் பாதுகாப்பு பிரிவினரின் காலத்தை செலவிடுவதை தவிர்த்து கொள்வதில் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top