போக்குவரத்து விதிமுறைகளை மீறும்
7 குற்றங்களுக்கு ரூ.25,000 தண்டம்
புதிய வர்த்தமானி வெளியானது
போக்குவரத்து
விதிமுறைகளை மீறும் 7குற்றங்களுக்கு, ஆகக் குறைந்த
தண்டப் பணம்
25,000 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.
சாரதி
அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துதல், சாரதி அனுமதிப் பத்திரம்
இல்லாதவர்களை பணியில் ஈடுபடுத்துவது, மது, போதைப்பொருள்
பாவனையுடன் வாகனம் செலுத்துதல், அதிக வேகத்தில்
வாகனம் செலுத்துதல்,
காப்புறுதி பத்திரமின்றி வாகனம் செலுத்துதல், இடது பக்கத்தால் முந்திச் செல்லுதல், ரயில்
கடவைகளை கவனயீனமாக கடத்தல் உள்ளிட்ட
குற்றங்களுக்காகவே, இவ்வாறு தண்டப்
பணம் அறவிடப்படவுள்ளது.
0 comments:
Post a Comment