எதிர்வரும் 15ஆம் திகதி அரச விடுமுறை


இலங்கையில் ஏப்ரல் 15ஆம் திகதி அரச விடுமுறை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கோரிக்கைக்கு அமைய குறித்த தினத்தில் விடுமுறை வழங்குவதற்கான அனுமதி அமைச்சரவையால் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 14ஆம் திகதி சித்திரை புதுவருட பிறப்பு கொண்டாடப்படவுள்ள நிலையிலேயே 15ஆம் திகதி இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஏப்ரல் 12 ஆம் திகதி அரை நாள் வங்கி விசேட விடுமுறை தினம் எனவும் ஏப்ரல் 15ஆம் திகதி விசேட வங்கி விடுமுறைதினம் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top