க.பொ.த சா/த பரீட்சை; கணிதம், ஆங்கிலத்தில்
சித்தியடைந்தோர் ஒப்பீட்டளவில் அதிகரிப்பு
வெளிவந்துள்ள
2018ஆம் ஆண்டுக்கான பாடசாலை பரீட்சார்த்திகளின் க.பொ.த சாதாரணதரப் பரீட்சை
பெறுபேறுகளின் அடிப்படையில் கணிதம் மற்றும் ஆங்கில பாடங்களில்
சித்தியடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ளது.
இதற்கமைய
2017ஆம் ஆண்டு கணித பாடத்தில் 67.24சதவீதத்தால் சித்தியடைந்திருந்த மாணவர்களின்
எண்ணிக்கை 2018ஆம் ஆண்டில் 68.30சதவிதத்தால் அதிகரித்துள்ளது. அதேபோன்று 2017ஆம்
ஆண்டில் ஆங்கிலப் பாடத்தில் சித்தியடைந்திருந்த 51.12சதவீத மாணவர்களின் எண்ணிக்கை
2018ஆம் ஆண்டில் 54.90மாக உயர்வடைந்துள்ளது. அத்துடன் தமிழ் மொழி மற்றும் இலக்கிய
பாடத்தில் 2017ஆம் ஆண்டில் சித்தியடைந்திருந்த 88.72சதவீத மாணவர்களின் எண்ணிக்கை
2018ஆம் ஆண்டில் 90.08ஆக அதிகரித்துள்ளது.
எனினும்
2017ஆம் ஆண்டில் விஞ்ஞான பாடத்தில் சித்தியடைந்தவர்களின் எண்ணிக்கை
73.46சதவீதத்திலிருந்து 2018ஆம் ஆண்டில் 69.83சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இதேவேளை
இவ்வருடம் க.பொ.த உயர்தரம் கற்பதற்கு தகுதியுடையோரின் எண்ணிக்கை 2.04சதவீதத்தால்
அதிகரித்துள்ளது. 2017ஆம் ஆண்டில் 2இலட்சத்து 16ஆயிரத்து 815மாணவர்கள் உயர்தரம்
கற்பதற்கு தகுதி பெற்றிருந்தனர். இது 73.05சதவீதமாகும். 2018ஆம் ஆண்டில் இந்த
எண்ணிக்கை 2இலட்சத்து 22ஆயிரத்து 281ஆக அதிகரித்துள்ளது. இது 75.09சதவீதமென்றும்
பரீட்சைகள் திணைக்களம் மதிப்பிட்டுள்ளது.
மேலும்
2018ஆம் ஆண்டில் ஒன்பது பாடங்களிலும் 'எ'
சித்தி பெற்றவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில்
குறைவடைந்துள்ளது. 2017ஆம் ஆண்டில் 9இலட்சத்து 960பேர் இவ்வாறு 'எ' சித்தி பெற்றிருந்தனர். இது
3.36சதவீதமாகும். எனினும் 2018ஆம் ஆண்டில் 'எ' சித்தி பெற்றவர்களின் எண்ணிக்கை
9இலட்சத்து 261ஆக குறைவடைந்துள்ளது. இது 3.13சதவீதமென்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோன்று
அனைத்து பாடங்களிலும் வெற்றிபெறாத மாணவர்களின் எண்ணிக்கை 2017ஆம் ஆண்டு
2.46சதவீதத்திலிருந்து 2018ஆம் ஆண்டில் 2சதவீதமாக குறைவடைந்துள்ளது. அத்துடன்
அனைத்து பாடங்களிலும் தோல்விபெற்ற மாணவர்களின் சதவீதம் 2011ஆம் ஆண்டு
4.74சதவிதமாகவும் 2012இல் 4.13சதவீதமாகவும் 2013இல் 3.57சதவீதமாகவும் 2015இல்
3.18சதவீதமாகவும் 2016இல் 3.11சதவீதமாகவும் இருந்துள்ளது. கடந்த ஆண்டுகளுடன்
ஒப்பிடும்போது அனைத்து பாடங்களிலும் தோல்வியை தழுவியுள்ள மாணவர்களின் எண்ணிக்கை
படிப்படியாக குறைவடைந்து வருவதையும் அவதானிக்க முடிந்துள்ளது.
0 comments:
Post a Comment