சீரான வானிலை தொடர்ந்தும்
நிலவும்
வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு
நாட்டின்
பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்தும் நிலவும் என
எதிர்பார்க்கப்படுகின்றது என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை
வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும்,
ஊவா மாகாணத்திலும் இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00
மணிக்குப் பின்னர் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் சப்ரகமுவ
மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன்
கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்
வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள
தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொது மக்களுக்கு
அறிவுறுத்தப்படுத்துகின்றது.
நாட்டைச்
சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
நாட்டைச்
சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என
எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது
தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு
10-20 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
புத்தளத்திலிருந்து
காங்கேசந்துறை மற்றும் மன்னார் ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட
கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ
மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment