பொது இடங்களில் 'புர்கா' அணிவதை
தவிர்த்துக் கொள்ளுங்கள்
உலமா சபை கோரிக்கை
பொது
இடங்களில் முகத்தை
மறைக்கும் 'புர்கா' ஆடைகளை அணிவதை தவிர்க்குமாறு
அகில இலங்கை
உலமா சபை
முஸ்லிம் பெண்களை
கோரியுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு
பாதுகாப்பு தரப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில்
இந்த கோரிக்கையை
விடுப்பதாக உலமா சபை அறிவித்துள்ளது.
உயிர்த்த
ஞாயிறு தினத்தில்
இடம்பெற்ற தாக்குதல்
தொடர்பில் விளக்கமளிக்கும்
ஊடக மாநாடு
நேற்று உலமா
சபை தலைமையகத்தில்
நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த உலமா
சபை இளைஞர்
விவகார செயலாளரும்
நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான அர்கம் நூர்
அமித் கூறியதாவது,புர்காக அணிவது
எமது கலாசார
அங்கமாகும். இது ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட உரிமையாகும்.நாம் கூறி
யாரும் 'புர்கா'அணியவில்லை. அவ்வாறு
கூறியிருந்தால் சகலரும் 'புர்கா 'அணிவார்கள்.
ஆனால்
தற்போதைய நிலைமையில்
பாதுகாப்பு தரப்பிற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக பொது
இடங்களில் 'புர்கா' அணியாமல் செல்லுமாறு கோருகிறோம்
என்றார்.
உலமா
சபை உப
செயலாளர் எம்.எஸ்எம். தாஸிம்
குறிப்பிட்டதாவது,
'புர்கா'
அணியும் சகோதரிகள்
தற்போதைய நிலைமையில்
முகத்தை மூடி
பாதுகாப்பிற்கு தடையாக இருக்க வேண்டாம் என
கோருகிறோம்.
தங்களை
அடையாளப்படுத்துவதற்காக தேசிய அடையாள
அட்டையை எடுத்துச்
செல்லுமாறும் கோருகிறோம் என்றார்.
0 comments:
Post a Comment