அசாதாரண சூழ்நிலையால்
மீண்டும் சோதனைச்சாவடிகள்!
அடையாள அட்டை உட்பட
கடும் சோதனை நடவடிக்கை!!
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ளஅசாதாரண
சூழ்நிலையால் பாதுகாப்பு படையினரால் நாடளாவிய ரீதியில்
வீதித் தடைகளை
ஏற்படுத்தி வாகனங்கள் மற்றும் நபர்கள் சோதனைக்கு
உட்படுத்தப்படுத்தப்பட்டு வருகின்றார்கள்.
இச்சோதனைச்
சாவடிகளில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் வீதிகளில் பயணிக்கின்ற சந்தேகத்திற்கிடமான பஸ், வான், கார், லொறி,
முச்சக்கர வண்டிகள்,
மோட்டார் சைக்கிள்
உட்பட ஏனைய
மோட்டார் வாகனங்கள்
நிறுத்தப்பட்டு முப்படையினரால் பரிசோதிக்கப்படுகின்றன.
இதேவேளை,
வீதியில் நடந்து
மற்றும் வாகனங்களில்
செல்லுகின்ற பொது மக்களின் ஆள் அடையாளங்கள்
பரிசோதிக்கப்படுவதுடன், அவர்கள் கொண்டு
செல்லுகின்ற பைகள், பொருட்கள், பொதிகள் என்பனவும்
விசேடமாக பரிசோதிக்கப்பட்டு
வருகின்றன.
அடுத்தடுத்து
மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலினால் நாட்டின் அனைத்துப்
பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு
தேடுதல் நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment