.பொ.. (சா.) பரீட்சையை
ஆறு பாடங்களாக குறைக்க முடிவு
கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவிப்பு

.பொ.. சாதாரண தர பரீட்சையை ஆறு பாடங்களுக்கு மட்டுப்படுத்த உள்ளதாகவும் உயர் தர வகுப்புக்களுக்கு ஏற்ற பாடங்களை மட்டும் சாதரண தரப்பரீட்சையில் அறிமுகப்படுத்த ஆலோசிப்பதாகவும் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

வெள்ளவத்தை சைவ மங்கையர் கல்லூரியின் 87ஆவது வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றுகையிலே அவர் இதைத் தெரிவித்தார்.

கல்லூரியின்  முகாமைத்துவ முகாமையாளர் சிவநாதினி துறைசாமி மற்றும் கல்லூரி அதிபர் அருந்ததி ராஜவியன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் உரையாற்றிய கல்வியமைச்சர்,எதிர்காலத்தில் .பொ.. சாதாரண தரத்தில் ஆறு பாடங்களுக்கு மட்டுமே பரீட்சை நடத்தப்படும்.

இது தொடர்பில் அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்படுகிறது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கு ஏற்ப 2இலட்சம் டெப் கணினிகளை உயர்தர மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

கல்வியமைச்சின் உதவி பெறும் தனியார் பாடசாலைகளுக்கும் இவை வழங்கி வைக்கப் படும்.

வெள்ளவத்தையில் தமிழ் மொழி மூலமான தேசிய பாடசாலையின் காணிப்பிரச்சினை தீர்க்கப்பட்டது. அவற்றினை எதிர்காலத்தில் நிர்மாணிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துவருகிறது.

கல்வியமைச்சு இந்த 4வருட காலத்தில் 1500அதிபர்களுக்கு வெளிநாட்டு புலமைப்பரிசில் வழங்கியுள்ளது. அவர்களுக்கு உலக மட்டத்தில் நவீன யுகத்தில் கல்வியைக் கொண்டு செல்வதற்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. கல்லூரிகளின் பௌதீக வளங்களைத் திருத்துவதற்கு 84பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 

தற்பொழுது கல்வி முறையில் வீட்டில் இருந்தே பி.எச்.டி படிக்கும் முறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாகவும் கல்வியமைச்சர் குறிப்பிட்டார்.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top