இலங்கை அரசியல் கட்சித் தலைவர்கள்
வேறுபாடுகளை புறம்தள்ளி
சவால்களை வெற்றிக்கொள்ளவேண்டும்
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்
இலங்கையிலுள்ள
அனைத்து அரசியல்
கட்சி தலைவர்களும்
வேறுபாடுகளை புறம்தள்ளி நாட்டின் பாதுகாப்பு மற்றும்
பொருளாதார சவால்களை
வெற்றிக்கொள்வதற்காக செயல்படவேண்டுமென்று இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான தூதுவர்
திருமதி எலேயினா
டெப்லிடிஸ் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில்
ஏற்பட்ட பயங்கரவாத
தாக்குதலுக்கு மத்தியில் இலங்கையில் ஜக்கியத்தை நிலைநிறுத்துவது
முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த
பயங்கரவாத தாக்குதல்
சில நபர்களின்
செயல்பாடுகளே ஆகும். இது மொத்த சமூகத்தின்
நடவடிக்கை அல்ல
என்றும் அவர்
சுட்டிகாட்டினார். அனைத்து மதத்துக்கும்
உட்பட்ட இலங்கையர்கள்
இந்த தாக்குதலை
கண்டிப்பதாகும் அவர் சுட்டிக்காட்டினார். பயங்கரவாதத்துக்கு எதிரான சிறந்த பதில் ஜக்கியமாவோம்
என்று அவர்
கூறினார்.
இலங்கை
அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக பெடரல் விசாரணை
அலுவலகத்தினதும் அமெரிக்க விஷேட குழுவினதும் ஒத்துழைப்பும்
இலங்கைக்கு பெற்றுக்கொடுக்கப்படும் என்றும்
அவர் கூறினார்.
இந்த சவாலுக்கு மத்தியில்
முன்னரிலும் பார்க்க வலுவாகவும் ஜக்கியத்துடன் செயற்படுவதற்கு
இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு அர்பணிப்பதாகவும் அறிக்கை ஒன்றை விடுத்து அவர்
இந்த விடயங்களை
கூறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment