முன் கூட்டியே எச்சரித்தும்
தாக்குதலைத் தடுக்கத் தவறியது ஏன்?
இலங்கையிடம் சர்வதேச ஊடகங்கள் கேள்வி!

முன் கூட்டியே எச்சரித்தும் தாக்குதலைத் தடுக்கத் தவறியது ஏன் என்று   இலங்கையிடம் சர்வதேச ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

இலங்கையில் தீவிரவாத தாக்குதலுக்கானஅச்சுறுத்தல் இருப்பதாக கடந்த 4 ஆம் திகதி இந்தியா இரகசியமாக எச்சரிக்கை விடுத்திருந்தது. இது தொடர்பான முக்கிய ஆவணங்ககளையும் அளித்தது. ஆனால், இலங்கை அரசு தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க்ப்படவில்லை எனக் கூறப்படுகின்றது.

இந்தியாவின் எச்சரிக்கை, இலங்கை உளவுத்துறையின் இரகசியத் தகவல்களுக்குப் பிறகும் இலங்கை அரசு தீவிரவாத தாக்குதலைத் தடுக்கத் தவறியது ஏன் என நியூயோர்க் டைம்ஸ் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன. இதற்கு ஜனாதிபதி, பிரதமர் இடையிலான மோதலே முக்கிய காரணம் என்றும் அந்த ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

 ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையே கடந்த ஆண்டு முதல் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. “நாட்டின் பாதுகாப்புத்துறை ஜனாதிபதியின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது.

பாதுகாப்புச் சபைக் கூட்டங்களில் பங்கேற்க பிரதமருக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. உளவுத்துறையின் இரகசிய அறிக்கை பிரதமருக்கு கிடைக்கவில்லை” என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன நேற்று நாடாளுமன்றத்தில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டி பேசியிருந்தார்.

இலங்கையில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்த்தவர்களுக்கும் இடையே இதுவரை மோதல்கள் ஏற்பட்டது கிடையாது. அப்படி இருக்கும்போது கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.




Add caption


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top