வெள்ளவத்தையில் வெடித்தது குண்டு அல்ல
வௌ்ளவத்தையில்
சற்றுமுன்னர் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் குண்டு
வெடிப்பு இல்லை
என்று பொலிஸ்
ஊடகப் பேச்சாளர்
கூறியுள்ளார்.
மோட்டார்
சைக்கிளின் ஆசனத்தை திறக்க முடியாதிருந்ததால் அதனை வெடிக்கச் செய்ததாகவும், அதில்
வெடி பொருட்கள்
எவையும் இருக்கவில்லை
என்றும் பொலிஸ்
ஊடகப் பேச்சாளர்
குறிப்பிட்டுள்ளார்.
எனினும்,
அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
கடந்த
ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சம்பவத்தை அடுத்து மேற்கொள்ளப்பட்ட
விசாரணையின் போது மோட்டார் சைக்கிள்கள்,
வாகனம் தொடர்பிலான
விடயங்களை கண்டறிந்துள்ளனர்.
இவை தொடர்பான
தகவல்களை பொலிஸார்
நேற்று பகிரங்கப்படுத்தியிருந்தனர்.
பொது
இடங்களில் நிறுத்தி
வைக்கப்படும் வாகனங்களில் முன்பக்கம் தெளிவாக தெரியக்கூடிய
வகையிலும் வாகன
உரிமையாளர்களின் கையடக்க தொலைப்பேசி இலக்கத்தை தெளிவாக
காட்சிப்படுத்துமாறும் அறிவுறுத்தி இருந்தனர்
என்பது குறிப்பிடத்தக்கது.
இதே
போன்று மோட்டார்
சைக்கிள் மற்றும்
வாகனங்களை பொது
இடங்களில் நிறுத்தி
வைக்கும் இடங்களில்
அதன் உரிமையாளர்கள்
இவ்வாறான விடயம்
குறித்து அவதானத்துடன்
செயல்பட வேண்டும்
என்றும் அறிவுறுத்தி
இருந்தனர்.
நாட்டில்
பல பிரதேசங்களில்
இடம்பெற்ற வெடிப்பு
சம்பவங்களின் காரணமாக இதுவரையில் தற்பொழுது நாடு
முழுவதிலும் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும்
பாதுகாப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் நிறுத்தப்படும்
வாகனங்களில் இவ்வாறு காட்சிப்படுத்துமாறும்
பொலிஸார் கேட்டுக்
கொண்டுள்ளனர்.
இதேபோன்று
ஏற்படக்கூடிய அனர்த்தத்தையும் தவிர்த்துக்கொள்ள
முடியும். உரிமையாளர் இல்லாத
வாகனம் தொடர்பில்
கூடுதலான கவனம்
செலுத்தி தேவையான
பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும்
பொலிஸார் மேலும்
தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Add caption |
0 comments:
Post a Comment