அதிக வெப்பத்துடன் கூடிய காலநிலை
வளிமண்டலவியல் திணைக்களம்
பொது மக்களுக்கு ஆலோசனை
அதிக
வெப்பத்துடன் கூடிய காலநிலை மே மாதம்
இறுதி வரை
நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வெப்பநிலை
32 பாகை முதல்
41 பாகை செல்சியஸ்
வரையிலான எல்லைக்குள்
இருக்கும் போது
கூடுதல் கவனம்
செலுத்த வேண்டிய
தேவையுள்ளது. இதன் காரணமாக தசைப்பிடிப்புடன் அலர்ச்சி ஏற்படலாம். வடமேல், வடக்கு,
வடமத்திய மாகாணங்களிலும்,
மன்னார், வவுனியா,
முல்லைத்தீவு, கம்பஹா, அம்பாறை மாவட்டங்களிலும் இத்தகைய
நிலை நீடிக்கக்கூடும்
என வளிமண்டலவியல்
திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்
காரணமாக, வெளியிடங்களில்
வேலை செய்வோர்
அடிக்கடி தண்ணீர்
அருந்தி நிழலில்
ஓய்வெடுப்பது அவசியம். முதியவர்களையும் நோயாளிகளையும் பரிசோதிப்பது
அவசியம். பிள்ளைகளை
தனியே விடக்கூடாது.
இலேசான, வெளிர்நிற
ஆடைகளை அணிவது
உசிதமானது என
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள ஆலோசனைக் குறிப்பில்
கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment