நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழங்கும்
முக்கிய வழிகாட்டல்கள்.



நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழங்கும்  முக்கிய வழிகாட்டல்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு

நாட்டில் அவசர கால சட்டம் அமுலில் இருப்பதாலும் பாதுகாப்பு காரணங்களைக் கவனத்திற்கொண்டும் ஜம்இய்யா இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களுக்கும் பின்வரும் வழிகாட்டல்களை வழங்குகின்றது. இவ்வழிகாட்டல்கள் தொடர்பில் சகல மஸ்ஜித் நிர்;வாகிகளையும் இமாம்களையும் அதி கவனம் செலுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றது.

1.எமது அனைத்து நிலமைகளையும் சீராக்குபவன் அல்லாஹுதஆலா ஒருவன் மாத்திரமேயாகும். அவனே எமது உண்மையான உதவியாளனாவான். எனவே தௌபா இஸ்திக்பார் செய்து அல்லாஹ்வின் பக்கம் அனைவரும் மீளுதல் வேண்டும்.

2.பல்லின சமூகம் வாழும் இந்நாட்டில் சமூகங்களுக்கிடையே ஒற்றுமையும் புரிந்துணர்வும் மலரவும், நாட்டில் சுபீட்சமும் அபிவிருத்தியும் உருவாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ஆறுதல் கிடைக்கவும்  அனைத்து முஸ்லிம்களும் நோன்பு பிடித்து துஆ செய்தல் வேண்டும்.

3.தான் ஜும்ஆவுக்கு வருகை தருவதால் தனது வீட்டிலுள்ள குழந்தைகள் பெண்கள் மற்றும் உடமைகளுக்கு ஆபத்து வரலாம் என்ற அச்சமுள்ளவர்கள் தத்தமது வீடுகளில் ளுஹ்ரைத் தொழுது கொள்வதற்கு பூரண அனுமதி உண்டு.

3.ஜுமுஆப் பேருரையை  உயிர்களை மதிக்கும் இஸ்லாம்எனும் தலைப்பில் அமைத்துக் கொள்ளல்.

4.ஊடரங்குச் சட்டம், அவசரகால சட்டம் அமுல்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில் அவற்றை மதித்து நடத்தல் வேண்டும்.

5.மஸ்ஜித்களில் குறிப்பாக ஜும்ஆ நடைபெறும் மஸ்ஜித்களில்  சந்தேகத்துக்குரிய பொருட்கள் ஏதேனும் உள்ளனவா என்பதை முன்னரே பரிசோதித்துக் கொள்ளல் வேண்டும்.

6.ஜுமுஆவுக்கு வருகை தரும்போது வாகனங்களில் வருவதை முற்று முழுதாகத் தவிர்ந்து கொள்ளல் வேண்டும். தவிர்க்க முடியாத இக்கட்டான கட்டத்தில் வாகனங்களில் வருகை தருபவர்கள் ஒவ்வொரு வரும் தனித்தனி வாகனங்களில் வருகை தராமல் பலர் இணைந்து ஒரு வாகனத்தில் வருதல் வேண்டும்.

7.வாகனங்களை நிறுத்தி வைக்கும்போது வாகச் சொந்தக்காரர்கள் தத்தமது தொலைபேசி இலக்கங்களை வாகனங்களில் எழுதி வைத்தல் வேண்டும்.

8.மஸ்ஜிதுக்கு வருகை தருபவர்கள் விடயத்தில் அவதானமாக நடந்துகொள்வதோடு எவ்வித பொதிகளையும் மஸ்ஜித் வளாகத்துக்குள் கொண்டு செல்வதற்கு அனுமதித்தல் கூடாது.

9.குத்பாவையும் தொழுகையையும் 30 நிமிடத்துக்கு மேற்படாமல்; சுருக்கிக் கொள்ளல்.

10.குத்பா மற்றும் தொழுகை நடைபெறும்போது மஸ்ஜித் நிர்வாகம் பொருத்தமாகக் கருதுகின்றவர்களை கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தல் வேண்டும்.  கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் ஜும்ஆ முடிந்த பிறகு ளுஹ்ரை ஜமாஅத்தாகத் தொழுது கொள்ளல் வேண்டும்.

11.ஜுமுஆ நடாத்த முடியாதளவு அச்சம் நிலவுகின்ற பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு நம்பிக்கையான சிலரை நியமித்தல் வேண்டும். அவர்கள் ளுஹ்ரை ஜமாஅத்தாகத் தொழுதுகொள்வார்கள்.

12.பதின் மூன்று வயதுக்குட்பட்டவர்களை மஸ்ஜிதுக்கு அழைத்து வருவதை முற்றாகத் தவிர்த்தல் வேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா இந்நாட்டில் சாந்தியையும் சமாதானத்தையும் நிலைநாட்டி மக்களுக்கு இடையில் ஒற்றுமையையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்துவானாக.

இவ்வண்ணம்
 அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்.
 செயலாளர் பத்வாக்குழு
 அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top