தற்கொலை குண்டுதாரிகளின் உடல்களை
இலங்கை முஸ்லிம்கள் பொறுப்பேற்க மாட்டார்கள்



கடந்த ஞாயிறு கொழும்பு உள்ளிட் சில இடங்களில் தாக்குதல் மேற்கொண்ட தற்கொலை குண்டுதாரிகளின் உடல்களை இலங்கை முஸ்லிம்கள் பொறுப்பேற்கப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை இந்த விவகாரத்தை பகிரங்கமாக அறிவித்துள்ளது.

குண்டுத் தாக்குதல்களை நடத்திய தற்கொலை குண்தாரிகளை எந்தவொரு இஸ்லாமிய பள்ளிவாசலிலும் நல்லடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப் போவதில்லை என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அப்பாவி பொதுமக்கள் மீது மிருகத் தனமான தாக்குதல்களை நடத்திய இந்த தற்கொலைதாரிகள் தமது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கிடையாது என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை குறிப்பிட்டுள்ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top