இன்று விடுதலையாகிறார்
ஞானசார தேரர்
பொது
பலசேனா அமைப்பின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரரை பொதுமன்னிப்பு அளித்து
விடுதலை செய்யும் ஆவணங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாலை
ஒப்பமிட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஞானசார
தேரரை விடுதலை செய்யும் ஆவணங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டு,
நேற்று மாலை
நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சுக்கு அனுப்பியுள்ளார்
என்று தமக்கு தகவல் கிடைத்திருப்பதாக பொது பலசேனாவின் நிறைவேற்றுப் பணிப்பாளர்
டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்.
பெரும்பாலும்
இன்று பிற்பகல் 3 மணிக்கு ஞானசார தேரர் விடுதலை
செய்யப்படுவார் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நீதிமன்றத்தை
அவமதித்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து, ஞானசார
தேரருக்கு 6 ஆண்டுகள், சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
கடந்த
சனிக்கிழமை வெலிக்கடைச் சிறைச்சாலையில் ஞானசார தேரரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
சந்தித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment