ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டதை
எதிர்த்து வழக்கு தொடர்வேன்:
சந்தியா எக்னேலிகொட
சிறை
தண்டனை அனுபவித்து
வந்த பொதுபல
சேனா அமைப்பின்
பொதுச் செயலாளர்
கலகொட அத்தே
ஞானசார தேரரை
பொது மன்னிப்பின்
கீழ் விடுதலை
செய்ய ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானத்தை தாம்
கடுமையாக எதிர்ப்பதாக
சந்தியா எக்னேலிகொட
தெரிவித்துள்ளார்.
கொழும்பில்
இன்று நடைபெற்ற
செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி,
ஞானசார தேரரை
விடுதலை செய்ய
எடுத்த தீர்மானத்தை
எதிர்த்து 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில்
உள்ளடக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு அமைய
அடிப்படை உரிமை
மீறல் வழங்க
தாக்கல் செய்து,
ஜனாதிபதியின் தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தப் போவதாகவும்
சந்தியா எக்னேலிகொட
குறிப்பிட்டுள்ளார்.
எது
எப்படி இருந்த
போதிலும் ஜனாதிபதியின்
பொதுமன்னிப்பின் கீழ் ஞானசார தேரர், இன்று
மாலை வெலிகடை
சிறையில் இருந்து
விடுதலை செய்யப்பட்டார்.
0 comments:
Post a Comment