10.09.2019 அன்று இடம்பெற்ற
அமைச்சரவைக் கூட்டத்தில்
மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்




01. இலங்கையில் தேசிய பேண்தகு அபிவிருத்தி தொலை நோக்கு 2030

ஜனாதிபதியினால் அமைச்சரவையின் அனுமதியுடன் நியமிக்கப்பட்ட 41 நிபுணர்களைக் கொண்ட குழுவினால் பேண்தகு இலங்கை 2030 தொலைநோக்கு மற்றும் மூலோபாய வழிகள் என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட பேண்தகு அபிவிருத்தி சபையிடம் கையளிக்கப்பட்ட அறிக்கையை எதிர்காலத்தில் பேண்தகு அபிவிருத்தி தொடர்பான தேசியக் கொள்கை மற்றும் மூலோபாய தயாரிப்பின் போது மூலோபாய வழிகாட்டலாக பயன்படுத்தப்படும். பேண்தகு அபிவிருத்தி இலக்கு மற்றும் நோக்கத்துடன் சம்பந்தப்பட்ட தேசிய கொள்கை மற்றும் மூலோபாயங்களை தயாரித்து பூர்த்தி செய்யும் வரையில் 2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்காக அமைச்சரவையினால் பரிந்துரை சமர்ப்பிக்;கப்பட்ட சந்தர்ப்பத்தில் மேற்குறிப்பிட்ட அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ள துறைசார் முக்கியத்துவத்தின் அடிப்படையில் ஒரு புதிய முயற்சி மற்றும் மாற்று பதில் திட்டமாகவும் திட்டத்தை செயற்படுத்துவதற்கான பரிந்துரையை சமர்ப்பிப்பது பொருத்தமாகும் என்று ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட சிபாரிசுகளை அமைச்சரவை கவனத்தில் கொண்டுள்ளது.

02. தேசிய பேண்தகு அபிவிருத்திக் கொள்கை மற்றும் மூலோபாயம்

நாட்டின் அபிவிருத்திக்காக பேண்தகு அபிவிருத்தி இலக்கை எட்டுவதன் முக்கியத்துவமும் பேண்தகு என்ற ரீதியிலான அபிவிருத்தி உலகமொன்றை உருவாக்குவதற்கான உலகளாவிய முயற்சிக்காக எமது அர்ப்பணிப்பு அனைத்து அரச அமைப்புக்களையும் ஒரு அரசாங்கத்தின் அமைப்பாக செயல்பட வேண்டும் என்றும் கவனத்தில் கொண்டு அனைத்து அமைச்சுக்களும் பொதுவான இலக்கை நோக்கி பேண்தகு என்ற ரீதியில் அபிவிருத்தியைக் கொண்ட இலங்கை என்று பயன்படுத்துவதற்கும் அனைத்து மாகாண சபைகளினதும் தொலைநோக்காக பேண்தகு ரீதியிலான அபிவிருத்தி இலங்கைக்காக பேண்தகு என்ற ரீதியிலான அபிவிருத்தியடைந்த சம்பந்தப்பட்ட மாகாணங்களின் பெயர்கள் ..... (சம்பந்தப்பட்ட மாகாணத்தின் பெயர்) என்று பயன்படுத்துவதற்கும் அனைத்து அமைச்சுக்களினால் பேண்தகு அபவிருத்தி இலக்கிற்காக முக்கியத்துவம் வழங்கி பொதுமக்கள் சேவை வழங்கும் மூலோபாயங்களை வகுப்பதற்கும் அனைத்து அரச நிறுவனங்களினாலும் அவ்வாறு அடையாளங்காணப்பட்ட மூலோபாயத்தின் கீழான வேலைத்திட்டம் மற்றும் திட்டத்தை அடையாளங்காண்பதற்கும் பேண்தகு அபிவிருத்தி சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட பேண்தகு அபிவிருத்தி சபை மூலம் பேண்தகு அபிவிருத்தி தொடர்பிலான தேசிய கொள்கையொன்றும் மூலோபாயத்தையும் தயாரிப்பதற்கும் ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. மொரஹக கங்கைகளுகங்கை அபிவிருத்தி திட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் காணி உரிமையாளரிடமிருந்து பொறுப்பேற்கப்பட்ட காணிகளை மதிப்பீடு செய்து பெறுமதிக்கு மேலதிகமாக இழப்பீட்டை செலுத்துதல்

மொரஹக கங்கை - களு கங்கை அபிவிருத்தி திட்டத்தின் பணிகளை ஆரம்பிக்கும் பொழுது ஏற்பட்ட நீண்டகால தாமதம் மற்றும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இருந்த நம்பிக்கை அற்ற நிலைமையின் காரணமாக திட்டப் பிரதேசத்தில் அடிப்படை வசதிகளுக்கமைவாக பிரதேசங்களுக்கு அருகாமை அபிவிருத்தி செய்யப்படாமை மற்றும் திட்ட பிரதேசத்தில் குடியிருந்தோர் அவர்களின் வீடுகள் சீர்செய்யப்படாமையினால் திட்டத்திற்காக பொறுப்பேற்கப்பட்ட சொத்துக்களை மதிப்பீடு செய்து இழப்பீட்டு; தொகை குறைந்தமையை கவனத்தில் கொண்டு லக்கல மற்றும் நாவுல பிரதேச செயலாளர் பிரிவுகளில் நிரந்தரமாக குடியிருந்த மற்றும் திட்டத்தின் காரணமாக அழுத்தத்திற்குள்ளான சிலருக்காக 50 சதவீதத்திற்கும் மேலதிகமாக இழப்பீட்டை செலுத்துவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும் சம்பந்தப்பட்ட மதிப்பீட்டுக் குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்படாத இந்த திட்டத்தின் காரணத்தினால் அழுத்தத்திற்குள்ளான பின்னர் தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட மெதிரிகிரிய பிரதேச செயலாளர் பிரிவில் குடும்பங்களுக்காக 50 சதவீதத்;திற்கு மேலதிகமாக இழப்பீட்டை செலுத்துவதற்கு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் துறை அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. பட்டதாரிகளை பயிற்சியாளர்களாக இணைத்துக் கொள்ளல் மற்றும் பயிற்சி

அமைச்சரவையினால் இதற்கு முன்னர் மேற்கொள்ளப்ட்ட தீர்மானத்திற்கு அமைவாக தற்பொழுது வெற்றிடமாக உள்ள 4667 பட்டதாரி பயிற்சியாளர் பதவிகளுக்காக 45 வயது வரையறைக்குள் இருக்கும் உள்ளக பயிற்சி மற்றும் வெளிவாரி பட்டதாரிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி கால அடிப்படை முறைக்கு அமைவாக 2012 ஆம் ஆண்டு தொடக்கம் பட்டத்தை பூர்த்தி செய்துள்ள பட்டதாரிகளை பயிற்றுவிப்பதற்காக 2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று கௌரவ பிரதமரும் தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள்குடியமர்வு புனர்வாழ்வு வடக்கு மாகாண அபிவிருத்தி இளைஞர் அலுவல்கள் அமைச்சர் முன்வைத்த அறிவிப்பை அமைச்சரவை கவனத்தில் கொண்டுள்ளது.

05.மொழிபெயர்ப்பு மறுசீரமைப்பு மற்றும் தகவல் மயப்படுத்தப்பட்ட ஜனநாயக ரீதியில் தொடர்புபடுதலை வலுவூட்டும் (STRIDE) திட்டம்

வடக்கு கிழக்கு வடமத்தி மற்றும் ஊவா மகாணங்களில் பன்முகப்படுத்தப்பட்ட பணிகளை முன்னெடுக்கும் செயற்பாடுகள் மற்றும் பொது மக்கள் மற்றும் அரசாங்கத்திற்கு இடையிலான தொடர்பாடலை வலுவூட்டுதல் அதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்மானத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் உள்ளக காரணிகளுக்கு தீர்வைக்காணுதல் பிரதேச பிரச்சினைகள் தலையெடுப்பதை தடுத்தல் போன்ற அடிப்படை நோக்கத்துடன் மொழிபெயர்ப்பு மறுசீரமைப்பு மற்றும் முழுமையான ஜனநாயக ரீதியில் தலையிடுதலை வலுவூட்டும் திட்டம் என்ற பெயரில் திட்டமாக உலக வங்கியின் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டம் மற்றும் பிரித்தானிய கவுன்சிலிங் மறைமுக முகாமைத்துவத்தினுடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்திற்கு நிதி உதவிக்காக 40 மில்லியன் யுரோக்களை நன்கொடையாக பெற்றுக் கொள்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் உடன்படிக்கையை எட்டுவதற்காக நிதி அமைச்சரினானால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. 2வது கூட்டு வீதி முதலீட்டு நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவி

வடக்கு கிழக்கு ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் கிராமங்களுக்குள் பிரவேசிக்கும் 3400 கிலோமீற்றர் வீதி அளவிலும் மற்றும் தேசிய 340 கிலோமீற்றர் வீதியை செப்பனிடுதல் பராமரித்தல் வீதி பராமரிப்பு ஆய்வு மற்றும் வீதி திட்டம் மற்றும் நிர்மாணித்தல் போன்ற பிரிவின் ஆற்றலை மேம்படுத்துவதற்கான 2ஆவது கூட்டு வீதி முதலீட்டு வேலைத்திட்டத்திற்கு மொத்த கடன் தொகையில் 900 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையில் பல கட்டங்களின் கீழ் நிதி வசதியைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பரிந்துரையிலான நிதி உதவி உடன்படிக்கையை எட்டியுள்ளது. 2023 ஆம் ஆண்டளவில் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்த்துள்ள மொத்த முதலீட்டு செலவு 171.8 மில்லியன் அமெரிக்க டொலர்களான இந்த வேலைத்திட்டத்தின் 2ஆவது கட்டப் பணிகளுக்காக 150 மில்லியன் கடன் தொகை ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் பொதுவான முதலீட்டு வள நிதியைப் பயன்படுத்துவதற்காக இந்த வங்கியுடன் உடன்படிக்கையை எட்டுவதற்கு நிதி அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

07. கண்டி நுவரவெல வர்த்தக கட்டிடத் தொகுதி மற்றும் விளையாடடு மைதானத்தை நிர்மாணிப்பதற்காக 121 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்வதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்ளல்.

மாநகரசபை எல்லைப் பிரதேசத்திலும் கங்கவட்ட கோரளை பிரதேச சபை எல்லைப் பகுதியில் மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துல் கண்டி நகரத்துக்குள் நிலவும் வீதி நெரிசலை கட்டுப்படுத்துதல் மாநகர சபை வருமான நிலையை மேம்படுத்துதல் பிரதேச மக்களின் விவசாய தயாரிப்புக்கு முக்கியத்துவம் வழங்கி உற்பத்திகளுக்கு சிறந்த விலையைப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் நுகர்வோரான பொதுமக்களுக்கு மிகவும் சிறந்த வர்த்தக சந்தை வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான வசதிகளை வழங்கும் வகையில் கண்டி மாநகர சபை எல்லைப்பகுதிக்குள் கண்டி மாசகர சபை கண்காணிப்பின் கீழ் 121 மில்லியன் ரூபா செலவில் ஒன்றிணைந்த நிதியை பயன்படுத்தி நுவரவெல வர்த்தக கட்டிடத்தொகுதி மற்றும் விளையாட்டு மைதானம் அகியவற்றை நிர்மாணிப்பதற்காக நகர அபிவிருத்தி அமைச்சரினால் சமர்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்து.

08. களுத்துறை பெரிய ஆஸ்பத்திரியில் வெளிநோயாளர் பிரிவிற்கு கட்டிடத்தை நிர்மாணித்தல்

கடந்த வருடத்தில் வெளிநோயாளர்கள் சிகிச்சை சேவையைப் பெற்றுக் கொள்வதில் அதிகரித்துள்ள கோரிக்கையின் காரணமாக களுத்துறை மாவட்ட பெரிய ஆஸ்பத்திரியில் தற்பொழுது உள்ள வெளிநோயாளர்ள் பிரிவு கட்டிட இட வசதி போதுமானதாக இல்லை என்பது அடையாளங் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்காக சுகாதாரம் போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்திய அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. அம்பாறை மாவட்ட பெரிய ஆஸ்பத்திரியில் விபத்து மற்றும் அவசர சேவை பிரிவுக்காக கட்டிடமொன்றை நிர்மாணித்தல்

அம்பாறை மாவட்ட பெரிய ஆஸ்பத்திரியில் விபத்து மற்றும் திடீர் சிகிச்சை சேவை வசதிகளை துரிதப்படுத்தப்படவேண்டிய தேவையை கருத்தில் கொண்டு இந்த வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை சேவை பிரிவுக்காக 2 மாடி கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வடிவமைக்கப்பட்டு நிர்மாணிக்கும் அடிப்படையில் பொறியியலாளர் பணிகள் தொடர்பில் மத்திய ஆலோசனை செயற்பாட்டு அலுவலகத்திற்கு மானியமாக வழங்குவதற்காக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. 2019 ஆம் ஆண்டில் மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சிடம் வழங்கப்பட்ட திறைசேரி நிதியைப் பயன்படுத்தி அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட மானியத்தைப் பயன்படுத்தி மதிப்பீடு செய்யப்பட்ட 20 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட 'சேருவாவில அபிவிருத்தி கட்டம் 2' 'யாழ்ப்பாணம் நகர அபிவிருத்தி - பஸ் தரிப்பு நிலையம்; கட்டம் 2' 'வெலிகந்தை நகரத்தை அபிவிருத்தி செய்தல்' 'எழுவான் குளம் - அறுவக்காடு வீதியை அபிவிருத்தி செய்தல்' மற்றும் 'அத்திடிய சிறுவர் பராமரிப்பு நிலைய கட்டிடம் 2' ஆகிய 5 திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. சப்ரகமுவ மாகாண சுகாதார பயிற்சி மத்திய நிலையத்தை நிர்மாணிப்பதற்காக இரத்தினபுரி புதிய நகரத்தில் உள்ள காணியொன்றை ஒதுக்கீடு செய்தல்

இரத்தினபுரி புதிய நகரத்தில் உள்ள நகர அதிகார சபைக்கு உட்டபட்ட 3 ரூட் 1.5 பேர்ச் காணி இரண்டை சப்ரகமுவ மாகாண சுகாதார பயிற்சி மத்திய நிலையத்தை நிர்மாணிப்பதற்காக அரசாங்கத்தினால் மதிப்பீடு செய்யப்பட்ட பெறுமதிக்கு அமைவாக 30 மில்லியன் ரூபாவை செலுத்துவதற்கு சப்ரகமுவ மாகாண சபையின் மாகாண சுகாதார திணைக்களத்திற்கு ஒதுக்கீடு செய்யும் வகையில் காணி ஆணையாளர் நாயகத்தினால் விடுவிப்பதற்காக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையை தேசிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணைக்குழு என்று பெயரில் ஸ்தாபித்தல்

1991 ஆம் ஆண்டு இலக்கம் 5 இன் கீழான மோட்டார் வாகன (திருத்த) சட்டத்தின் மூலம் 17 அங்கத்தவர்களைக் கொண்ட சபையாக ஸ்தாபிக்கப்பட்ட வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை சட்ட வலுவுடன் வலுவான நிறுவனமாக ஸ்தாபிப்பதன் தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக முறையான சட்டக் கட்டமைப்புக்குள் முக்கிய நிறுவனமாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தேசிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணைக்குழுவாக ஸ்தாபித்தல் இந்த சபையை அமைப்பதற்காக பொருத்தமான அரசியல் யாப்பு திருத்தத்தை மேற்கொள்ளும் பொருட்டு சட்ட வரைவு பிரிவிடம் ஆலோசனை வழங்குவதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. 1979ஆம் ஆண்டு இல 15 இன் கீழான குற்ற வழக்கு கட்டளைச்சட்டத்தில் திருத்தம்

1979 ஆம் ஆண்டு இல 15 இன் கீழான குற்ற வழக்கு கட்டளைச் சட்டத் திருத்தம் 2019 ஜுன் மாதம் 14ஆம் திகதி வர்த்தமானி அறிவிப்பில் வெளியிடப்பட்டது. இதன் பின்னர் சட்டத்திருத்தத்தை கவனத்தில் கொள்வதற்காக ஒன்று கூடிய துறைசார் மதிப்பீட்டுக்குழு பல திருத்தங்களை சிபாரிசு செய்துள்ளது. அத்தோடு சட்ட திருத்த வரைவு பிரிவினால் அதன் திருத்த குழு மட்டத்தில் திருத்தத்துடன திருத்த சட்டமூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமைச்சரவையினால் இதற்கு முன்னர் வழங்கப்பட்டள்ள அங்கீகாரத்திற்கு அவைமாக திருத்த சட்டமூலத்தின் சாரத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் திருத்தத்துடன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னர் அனுமதிக்காக அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளது. இதனால் நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சரினால் மேற்கண்ட குழு திருத்தம் மற்றும் 2019 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 14அம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள திருத்த சட்டமூலத்தை அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இது அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

14. குற்றவியல் நடைமுறைச்சட்டம் மற்றும் 1979ஆம் ஆண்டு இல 15 குற்ற வழக்கு ஒழுங்கு விதிகள் நடைமுறைகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட திருத்தம்

குற்றவியல் நடைமுறைக்கும் குற்றவழக்கு குறியீட்டின் விதிகளில் குறிக்கப்பட்டுள்ள திருத்த ரீதியில் பகைமை பேச்சு எதிர்ப்பு தொடர்பான யாப்பு திருத்தத்தை மேற்கொள்வதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைவாக தயாரிக்கப்பட்ட திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தின் துறைசார் கண்காணிப்பு குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டதுடன் இந்த குழவின் சிபாரிசுக்கமைய சட்ட திருத்த பிரிவினால் திருத்த சட்ட மூலம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் புதிய திருத்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அதனை தொடர்ந்து அனுமதிக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. தண்டப் பணத்தை அதிகரித்தல் (1997ஆம் ஆண்டு இல 30 இன் கீழான பிணை சட்டம்)

சில சட்டங்கள் மற்றும் கட்டளை சட்டங்களில் அடங்கியுள்ள ஒழுங்கு விதிகளை மீறுவது தொடர்பில் விதிக்கப்படும் தண்டப்பணம் அவ்வாறான மீறுதல் மேற்கொள்ளப்படுவதை தடுப்பதற்காக எந்த வகையிலும் போதுமானதல்ல என்பதினால் இந்த நிலைமையை கவனத்தில் கொள்வதற்கு பொருத்தமானது என்பதினால்; அதன் தண்டப் பணத்தின் தொகையை அதிகரிப்பதை குறிப்பிட்டு சம்பந்தப்பட்ட சிபாரிசை சமர்ப்பிப்பதற்கு அப்போதைய நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் அவர்களினால் குழுவொன்று நியமிக்கப்பட்டது. இந்த குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சிபாரிசுக்கமைவாக பிணை சட்டத்தின் குறிப்பிடப்பட்டுள்ள தண்டப் பணத்தை அதிகரிப்பதற்காக திருத்த சட்டத்தை மேற்கொள்ளுமாறு திருத்த சட்டமூலம் வரைவு பிரிவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. வீரவில மற்றும் எம்பிலிபிட்டிய துன்கம விவசாய மற்றும் தொழில் பயிற்சி மத்திய நிலையமொன்றையம் மாத்தறை சிறைச்சாலைக்கு அருகாமையில் மகளிர் கைதி பயிற்சி மத்திய நிலையமொன்றை அமைத்தல்

2019ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் முன்மொழிவின் மூலம் உத்தேச கிபுட்ஸ் (Kibbutz) ரகத்தைச் சேர்ந்த விவசாய சந்தைகளில் இரண்டை அம்பேபுஸ்ஸ மற்றும் வீரவில ஆகிய இடங்களில் சிறைச்சாலைகளை அமைப்பதற்காக வீரவில மற்றும் எம்பிலிபிட்டிய துன்கம போன்ற சிறைச்சாலை திணைக்களத்திற்கு உட்பட்ட பகிரங்க சிறைக்கைதிகள் 2 பேர் போதைப்பொருளினால் ஈர்க்கப்பட்டு சிறைச்சாலைகளில் உட்படுத்தப்பட்ட நபர்களை புனரமைத்தலுக்காக அனைத்து வசதிகளையும் கொண்ட விவசாய மற்றும் தொழில் பயிற்சி மத்திய நிலையமொன்றை அமைப்பதற்கும், 2019 வரவு செலவு திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்ட மகளிர் சிறை கைதிகளுக்காக பயிற்சி மத்திய நிலையமொன்றை தொம்பே பிரதேசத்தில் அமைப்பதற்காக மாஹர சிறைச்சாலைக்கு அருகாமையில் வெற்றுக் காணியாக உள்ள பகுதியில் அமைப்பதற்கும் இந்த 2 திட்டங்களுக்குமான நிதியை திறைசேரியின் மூலம் சிறைச்சாலை திணைக்களத்திற்கு வழங்குவதற்காக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17. 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1அம் திகதி தொடக்கம் 2020 ஜுலை மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்காக ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் A 330 – 200 விமானம் தரையிறங்கும் கட்டமைப்பை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்

ஸ்ரீ லங்கன் விமான சேவை கொண்டுள்ள A 330 – 220 6 விமானங்களை தரையிறங்குவதற்கு வசதியாக கட்டமைப்பை நவீனமயப்படுத்துவதற்கான ஒப்பந்தம் அதில் குறிப்பிடப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட போட்டி கேள்விமனு கோரும் செயற்பாடுகளில் கணிசமான பெறுபேற்றை வெளிப்படுத்திய ஆகக்குறைந்த கேள்வி மனுவான M/S Safran Landing Systems Services Singapore என்ற நிறுவனத்திடம் 2019.08.01 தொடக்கம் 2020.07.31 வரையான கால எல்லைப் பகுதிக்காக வழங்குவதற்கு நிதியமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

18. 3ஆம் நிலை மருத்துவ வைத்தியசாலைகளில் முக்கியத்துவமிக்கது என்ற ரீதியில் தமணி Arterial disease என்ற நோய் மதிப்பீடு மற்றும் விளம்பரப்படுத்துவதற்குத் தேவையான வசதிகள் மற்றும் உபகரணங்களை மேம்படுத்துவதற்கான திட்டத்தை உருவாக்குதல் ஒப்பந்த நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை வெளிப்படுத்தல் மதிப்பீடு மற்றும் பயிற்சிக்கான ஆலோசனை சேவைகளுக்கான பெறுகையை மேற்கொள்ளுதல்

ஜப்பான் சர்வதேச புரிந்துணர்வு பிரதிநிதிகள் நிறுவனத்தின் கடன் நிதியுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் சுகாதார மற்றும் வைத்தியத்துறை மட்டத்திலான சேவையை மேம்படுத்துதல் திட்டத்தின் ஆலோசனை சேவை ஒப்பந்தம் Arterial disease ஆய்வு மற்றும் விசேட (கொய்) ஆய்வு மற்றும் விசேட நிபுணத்துவ மாற்று அறுவை சிகிச்சை பின்கொ சர்வதேச நிறுவனம் மத்திய பொறியியலாளர் மற்றும் ஆலோசனை செயலகம் மற்றும் பில்கொய் சர்வதேச மற்றும் கூட்டுத்தாபன நிறுவனமான வின்கோ சர்வதேச நிறுவனத்திடம் வழங்குவதற்காக சுகாதாரம் போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்திய அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

19. யாழ்ப்பாண நகர சபையை அபிவிருத்தி செய்தல்

யாழ் நகர மண்டபத்தை அபிவிருத்தி செய்யும் ஒப்பந்தத்தை வரையறுக்கப்பட்ட மத்திய பொறியியலாளர் சேவை (தனியார்) நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்காக மாநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

20. சுகித்த புரவர நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் 3 திட்டங்களுக்கு தேசிய பெறுகை விதிமுறைகளுக்கு அப்பால் பொறியியலாளர் பணி தொடர்பில் மத்திய ஆலோசனை செயலகத்தின் கீழ் இதற்கு இணைந்த நிறுவனமாக செயல்படும் வரையறுக்கப்பட்ட மத்திய பொறியியலாளர் சேவை தனியார் நிறுவனத்திடம் வழங்கல்

சுகித்த புரவர என்ற நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் எழுவன்குளம் அறுவக்காடு வீதியில் Y சந்தி வரையிலான 1.85 கிலோமீற்றர் வீதியை காப்பட் இடுதல் புதுக்குடியிருப்பு கண்டாவெல பாடசாலைக்காக 2 மாடி நூல் நிலைய கட்டடிடமொன்றை நிர்மாணித்தல் பாடசாலைக்காக 2 மாடி கட்டடிடமொன்றை நிர்மாணித்தல் உள்ளிட்ட திட்டங்களுக்கான ஒப்பந்தம் வரையறுக்கப்பட்ட மத்திய பொறியியலாளர் சேவையிடம் வழங்கப்படவுள்ளது. இதற்காக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

21. வரட்சி வலய அபிவிருத்தி திட்டம்

வரட்சி வலய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் முதல் கட்டமாக அநுராதபுர மாவட்டத்தில் வரட்சி வலய அபிவிருத்தி திட்டம் அனுராதபுர மாவட்டத்தில் 331 மில்லியன் ரூபா நிதி உதவியில் 2019 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்துவதற்கும் இதன் கீழ் விவசாயத்தினை அபிவிருத்தி செய்தல் விவசாய பாதைகளை புனரமைத்தல் பயனாளிகளுக்காக விவசாய உபகரணங்களை விநியோகித்தல் சமூக மண்டபத்தை நிர்மாணித்தல் போன்ற பணிகளுக்காக 204 மில்லியன் ரூபா நிதியில் நிர்மாணிப்பதற்கும் சுத்தமான குடிநீரை விநியோகித்தல் மனை மற்றும் சிறிய கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் மேம்படுத்துதல் பயிற்சி மற்றும் தெளிவுபடுத்தல் விவசாய கைத்தொழில் துறையை பயனுள்ள வகையில் அபிவிருத்தி செய்தல் ஆகிய பணிகளை 127 மில்லியன் ரூபா நிதியில் நிறைவேற்றுவதற்கும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் மற்றும் வரட்சி வலய அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

22. கொழும்பு கிழக்கு போதனா வைத்தியசாலை இலவச மற்றும் நிதி செலுத்தும் அடிப்படையில் சேவை வழங்கும் மித்துரு சேவா ஆக்குருத்தியக் ( கலப்பு சேவை மாதிரி) என்ற கலப்பு சேவை என்ற ரீதியில் முகாமைத்துவத்தை மேற்கொள்வதற்கான திட்டம்

கொழும்பு கிழக்கு போதனா வைத்தியசாலை அரைசொகுசு நிர்வாக அலகு என்ற ரீதியில் இலவச மற்றும் பணம் செலுத்தும் அடிப்படையில் சேவை வழங்கப்பட்ட மித்ர சேவா ஆக்குருத்தி ( கலப்பு சேவை மாதிரி) என்ற பெயரில் நடைமுறைப்படுத்துவதற்கும் இந்த வைத்தியசாலையின் மூலம் மேற்கொள்ளப்படும் வைத்திய கல்விக்கான பணிகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்காகவும் சுகாதாரம் போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்திய அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top