ஆசியாவை ஆச்சரியத்தில் 
ஆழ்த்தவுள்ள அதிசயம்!

 15ம் திகதி கொழும்பில் மலரப்போகும் தாமரை

கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரை கோபுரம் எதிர்வரும் 15ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியாவில் மிகவும் உயர்ந்த கட்டடமாக இது வரலாற்றில் இடம்பிடிக்கவுள்ளது. 356 மீற்றர் உயரமும், 4 நிலக்கீழ் மாடிகளை கொண்ட கோபுரத்தில் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன.

90 மாடிகளை கொண்ட இந்த கோபுரத்தின் உச்சிக்கு வெறும் இரண்டு நிமிடங்களில் லிப்ட் மூலம் செல்ல முடியும் என்பது சிறப்பம்சமாகும்.

1148.3 அடி உயரத்தையும் 30,600 சதுர மீற்றர் விஸ்தீரணத்தையும் கொண்டதாக அமைந்திருக்கும் கோபுரத்தை அமைக்க 104 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது.

பல அதிசயங்களை உள்ளடங்கிய வகையில் அமைக்கப்பட்டுள்ள தாமரை கோபுரம் ஆசியாவிலேயே மிகவும் உயரமான கட்டடத்தொகுதியாக அமையவுள்ளது.
இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள தாமரை கோபுரமானது கொழும்பு  விஜயரத்தின மாவதைக்கும் பெரா வாவிக்கும் அருகாமையில் காணப்படுகின்றது. இது பெரா வாவியிலிருந்து மேற்காக 740மீட்டர் இலும், ரட்ணம் வைத்தியசாலையிலிருந்து தென்மேற்காக 730மீட்டர் இலும், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து வடமேற்காக 1.1/4 கிலோமிட்டர் இலும், விகாரமாதேவி பூங்காவிலிருந்து தெற்காக 1.1/2கிலோமீட்டர் இலும் அமைந்துள்ளது. இதன் உயரத்திலிருந்து நின்று பார்க்கும் போது ஒருவருக்கு கொழும்பு மாவட்டம் முழுவதும் தெரியும் என்பது யதார்த்தமான உண்மை ஆகும். இதன் கட்டுமான பணிகள் 2012ம் ஆண்டு ஆரம்பிக்கபட்டது.

இந்த தாமரை கோபுரமானது சீனாவின் நிதியுதவியுடன் 104மில்லியன் அமெரிக்கா டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது 356.3 மீட்டர் உயரத்தினை கொண்டுள்ளதோடு தெற்காசியாவில் மிக உயரமான கோபுரமாகவும் விளங்குகின்றது. உலகின் அதிசயத்தில் ஒன்றான பிரான்ஸ் இன் ஈபிள் கோபுரம் 324மீட்டர் இனை கொண்டுள்ளமை குய்ப்பிடத்தக்கது. குறிப்பாக ஷாங்காய் கோபுரம் 468மீட்டர் இனையும் பெர்க்கி கோபுரம் 405 மீட்டர் இனையும் பெர்லின் கோபுரம் 375மீட்டர் இனையும் அதற்கு அடுத்ததாக இலங்கை தாமரைக்கோபுரம் அதிக உயரத்தினை கொண்டதாக உள்ளமை விசேட அம்சமாகும்.

இந்த தாமரைக்கோபுரமானது கொழும்பு மாநகரத்துக்கு அழகு சேர்க்கும் முகமாக அமைகின்றது. இந்த கோபுரத்தில் 13 மாடிகள் காணப்படுகின்றது. இதில் 6 மாடிகள் அடித்தளத்தில் காணப்படுகின்றது. இதன் உச்சிக்கு செல்ல மின்சார தூக்கிகள் உபயோகிக்கப்படுள்ளது. இங்கு 215 மீட்டர் வரை மின் தூக்கியில் செல்வதற்கு 2நிமிடம் மாத்திரம் தேவைப்படும். இதன் முதலாவது மாடியில் வர்த்தக கடை தொகுதியும், உணவு கடை தொகுதியும் காணப்படுகின்றது. இதன் 3,4 மாடிகளில் விடுதியும் 244வது  மீட்டரில் விருந்தினர் பகுதியும் காணப்படுகின்றது. இதுதவிர இக்கோபுரத்தில்  400பேர் அமரக்கூடிய மாநாட்டு மண்டபம், திருமண வரவேற்பு மண்டபம், ஆடம்பர அறை, விடுதிகள், பார்வையாளர் மண்டபம் போன்றன காணப்படுகின்றது.

இக்கோபுரத்தின் அடித்தள பகுதியில் தொலைதொடர்பாடல், அருங்காட்சியகம், உணவு விடுதிகள், பூங்காக்கள், 50 ரேடியோ நிலையங்கள், 50 தொலைக்காட்சி நிலையங்கள், 20 தொலைத்தொடர்பு நிலையம் ஆகியனவும் உண்டு. இவை 219.8 மீட்டர் இல் அமைந்து காணப்படுகின்றன.

தாமரை கோபுரமானது 1148.3 அடி உரத்தினை கொண்டுள்ளதோடு 30600 சதுர கிலோமீட்டர் விஸ்தீரணத்தினையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் அயல் நாடுகளுக்கு எதிரான மின்னணு கண்காணிப்பு வசதி காணப்படுகின்றது. இக்கோபுரத்துக்கான திட்டமிடல் மற்றும் கட்டிட நிர்மாண வேலைகளினை மொறட்டுவை பல்கலைக்கழகத்தினை சேர்ந்த 50 பொறியியலாளர்கள் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் உருவாக்கத்துக்கு 5000தொன் இரும்பும், 20000சென்றிமீட்டர் கனம் கொங்கிறீட் உம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான தாமரை கோபுரம் அமைக்க பெற்றதனால் இலங்கைக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கப்பெறவுள்ளன. குறிப்பாக தெற்காசியாவில் சிறப்பான தொழில்நுட்பத்தினை கொண்டு அமைக்கப்பட்டுள்ள கோபுரமாக இது காணப்படுகின்றது. அத்துடன் இந்துசமுத்திர பரப்பில் இக்கோபுரமானது முக்கிய புள்ளியில் அமைந்து கடற் வர்த்தக பாதையில் அமைந்து அனைத்துலக நாடுகளினது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இத்தாமரை கோபுரத்தில் தொலைதொடர்பாடல் சேவை, மாநாடு மண்டபங்கள், விடுதிகள், கடைத்தொகுதிகள் மூலம் அதிகளவிலான வருமானத்தினை பெற்று கொள்ளமுடியும். குறிப்பாக சிறப்பான உட்கட்டுமான விருத்தி காணப்படுவதனால் அதிகளவிலான வேலை வாய்ப்புகளும் கிடைக்கப்பெறும். ஏனைய நாட்டு மக்கள் இங்கு வந்து கலந்துரையாடல்கள், கூட்டங்கள், பார்வையிடல் முதலானவற்றினை மேற்கொள்ள வாய்ப்பாக இருக்கும்.
இதுமட்டுமல்லாது இக்கோபுரத்தினை பார்த்து ரசிப்பவர்கள் ஏராளம். இதன் மூலம் சுற்றுலாவுக்குரிய சிறந்த தளமாக இது மாறிவருகின்றது. அத்துடன் பாடசாலை மாணவர்கள், ஏனையவர்களுக்கு டிக்கெட் வழங்குவதன் மூலம் சுற்றுலா விருத்திக்கு ஒரு உந்துசக்தியாக அமைகின்றது. அத்துடன் தெற்காசியாவில் எதிர்காலங்களில் சிறந்த தொழில்நுட்பத்துடன் விருத்தி கூடிய நாடாக இலங்கை மாறுவதற்கு இத்தாமரை கோபுரம் வளவாய்ப்பாக காட்ச்சியளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top